விடாமுயற்சி அஜித்தோட டிராவல் Vlog-ஆ?.. மகிழ் திருமேனி பேட்டியை பங்கம் பண்ணும் விஜய் ரசிகர்கள்!

சென்னை: அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனி அளித்த பேட்டி ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகர் அஜித் குமார் ரேஸர் என்பதை எல்லாம் தாண்டி அவர் ஒரு சிறந்த புகைப்படக் கலைஞர் என்றும் அதற்காகவும் அவர் பரிசு எல்லாம் வாங்கியிருக்கிறார் என்றும் பல சுவாரஸ்ய விஷயங்களை மகிழ் திருமேனி பேசியுள்ளார்.

லைகா தயாரிப்பில் அஜித் குமாரின் 62வது படத்தை ஆரம்பத்தில் இயக்கவிருந்தது இயக்குநர் விக்னேஷ் சிவன் தான். ஆனால், அவர் சொன்ன திரைக்கதை பிடிக்காமல் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இயக்குநரை அதிரடியாக அஜித் மாற்றிவிட்டார்.

vijay ajith kumar vidamuyarchi

அதன் பின்னர், அந்த படத்தை இயக்க மகிழ் திருமேனி வந்த நிலையில், ஆங்கில படமான பிரேக் டவுன் படத்தை இயக்கும்படி மகிழ் திருமேனிக்கு அஜித் குமார் உத்தரவிட்டதாகவும் அந்த படத்தை தான் அவர் எடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மகிழ் திருமேனியின் பேட்டியை மீம் போட்டு விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

வாரிசு ட்ரோல்: தில் ராஜுவின் வீட்டில் அதிரடியாக ஐடி சோதனை நடைபெற்ற நிலையில், விஜய்யை வைத்து அவர் தயாரித்த வாரிசு படம் மிகப்பெரிய நஷ்டம் என்றும் அதன் மொத்த வசூல் 120 கோடி ரூபாய் தான் என்றும் விஜய்க்காக தில் ராஜு வசூல் வடை சுட்டு மாட்டிக் கொண்டார் என ஒரு பக்கம் அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வெறுப்பேற்றி வந்த நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் மீண்டும் பழிவாங்கும் படலத்திற்கு சென்று அஜித்தின் விடாமுயற்சி படத்தை எப்படியாவது தோல்விப் படமாக மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

வேட்டையன் நிலைமை தான்: லைகா தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான லால் சலாம், இந்தியன் 2 மற்றும் வேட்டையன் என அனைத்து படங்களும் வசூல் ரீதியாக தோல்வியை தழுவிய நிலையில், அதே நிலைமைதான் விடாமுயற்சி படத்துக்கும் ஏற்படப்போவதாக இப்போதே ட்ரோல்கள் குவியத் தொடங்கியுள்ளன. வேட்டையன் படத்தை போல கன்டென்ட் விடாமுயற்சி படத்தில் இருந்தாலும் பெரியளவில் ரசிகர்களை கவரும் கமர்ஷியல் படமாக இது இருக்காது என்றும் கொஞ்ச நேரத்திலேயே போதும்டா சாமி என படம் போரடிக்கத் தொடங்கிவிடும் என்றும் கூறுகின்றனர்.

அஜித்தின் டிராவல் Vlog: இந்நிலையில், யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ் மற்றும் கருணாஸ் நயன்தாராவுடன் பேசும் காமெடி டெம்ப்ளேட்டை மீமாக போட்டு, "இது மாஸ் படம் இல்லைங்க, இது கமர்ஷியல் படம் இல்லைங்க, இது என்னோட கதையே இல்லைங்க, மொத்தத்துல இது படமே இல்லைங்க, அஜித் அஜர்பைஜானில் சுற்றிக் கொண்டிருந்தபோது எடுத்த டிராவல் vlogங்க என பங்கமாக கலாய்த்த மீம் ஒன்றை விஜய் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர். வரும் பிப்ரவரி 6ம் தேதி மறுபடியும் கோலிவுட்டில் விஜய் - அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய சண்டை சோஷியல் மீடியாவில் வெடிக்கும் என்பது உறுதியாகி உள்ளது. அனைத்தையும் கடந்து விடாமுயற்சி திரைப்படம் வெற்றி பெறும் என்றும் மகிழ் திருமேனி மீது நம்பிக்கை அதிகம் இருப்பதாக அஜித் ரசிகர்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

vijay ajith kumar vidamuyarchi

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X