ரஜினிகாந்தை இனிமே ட்ரோல் செய்ய மாட்டோம்.. திடீரென சபதம் எடுத்த விஜய் ரசிகர்கள்.. செம கேம்!
சென்னை: லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் என்ன நினைத்து பேசினாரோ அது சக்சஸ் ஆகிவிட்டதாகவே தெரிகிறது. ஆனால், இந்த விஷயத்தை நடிகர் விஜய் தனக்கு சாதகமாக்கிக் கொண்டாரா என்கிற புதிய கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
லால் சலாம் ஆடியோ லான்ச் விழாவில் நடிகர் விஜய்க்கும் எனக்கும் போட்டியில்லை. அப்படியெல்லாம் பேசாதீங்கப்பா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. விஜய் நான் பார்த்து வளர்ந்த புள்ள. அவரை நான் காக்கான்னு சொல்லல.. ஆனால், நான் சொன்ன காக்கா - கழுகு கதையை சிலர் அப்படியே திரித்து ரசிகர்கள் மத்தியில் சண்டையை உண்டாக்கி விட்டனர் என ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசியது விஜய் ரசிகர்களை அமைதியாக்கி உள்ளது.

லால் சலாம் புரமோஷன்: நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தின் புரமோஷனுக்காகத்தான் அப்படி பேசினார் என அஜித் ரசிகர்கள் இடையே புகுந்து பற்ற வைக்க நினைத்தாலும், அதெல்லாம் இல்லைப்பா பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான் என விஜய் ரசிகர்கள் ரஜினிகாந்தின் பேச்சைக் கேட்டு ரொம்பவே ஆனந்தமடைந்துள்ளனர்.
ரஜினியை ட்ரோல் பண்ண மாட்டோம்: படுமோசமான வார்த்தைகளை பயன்படுத்தி வீடியோ மீம்களை பயன்படுத்தி ரஜினிகாந்தை மோசமாக விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்த நிலையில், இனிமேல் ரஜினிகாந்துக்கு உரிய மரியாதை கொடுப்போம் என்றும் ரஜினிகாந்தை ட்ரோல் செய்ய மாட்டோம் என பல விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதுவரை ரஜினிகாந்தை படுமோசமாக விமர்சித்து வந்தவர்களே இனிமேல் சூப்பர் ஸ்டாரை அப்படி பேச மாட்டோம் என சத்தியம் செய்யாத குறையாக பதிவுகளை போட ஆரம்பித்துள்ளனர்.
அஜித் ரசிகர்கள் அப்செட்: விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் ஒன்றாக இணைந்த நிலையில், சில அஜித் ரசிகர்கள் இதனால் அப்செட் ஆகி உள்ளனர். இதுவரை ரஜினிகாந்த் ரசிகர்களுடன் இணைந்துக் கொண்டு விஜய்யையும் அவரது ரசிகர்களையும் வெறுப்பேற்றி வந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த புதிய கூட்டணி பிடிக்கவில்லை என்றே வெளிப்படையாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யின் அரசியல்: சினிமாவை தாண்டி அடுத்து பெரிய எய்ம் உடன் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ள நடிகர் விஜய் ஒவ்வொரு மாவட்டத்திலும் ரஜினிகாந்த் மன்றங்கள் மூலமாக செயல்பட்டு வரும் ரஜினிகாந்த் ரசிகர்களின் பலத்தை புரிந்துக் கொண்ட நிலையில், ரஜினிகாந்தின் லால் சலாம் பேச்சை தங்களுக்கு சாதகம் ஆக்கிக் கொண்டு இனிமேல் சண்டை வேண்டாம் என்கிற முடிவுடன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு மறைமுக கட்டளை விடுத்த நிலையில் தான் இனிமேல் ரஜினியை ட்ரோல் செய்ய மாட்டோம் என விஜய் ரசிகர்கள் முடிவு செய்திருக்கின்றனரா? என்கிற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

நல்ல விஷயம் தான்: பாலிவுட் நடிகர்கள் முதல் இந்திய சினிமாவின் அனைத்து பிரபலங்களும் ரஜினிகாந்தை கொண்டாடி வரும் நிலையில், தமிழ் சினிமாவில் மூத்த நடிகரை ஒருமையில் பேசுவது, ஆபாசமாக சித்தரித்து கமெண்ட்டுகளை போட்டு வன்மத்தை கக்குவது போன்ற விஷயங்கள் இல்லாமல் வியாபார யுக்தியை தாண்டி ரஜினிகாந்த் உடன் மோதல் இல்லாமல் அவரை மதித்து செல்வது நல்ல விஷயம் தான் என்றும் விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களுடன் சண்டை போட மாட்டோம் என ஒரு நாள் சொல்லி விட்டு அடுத்த நாள் மீண்டும் பயங்கர சண்டையை ஆரம்பிப்பது போல இல்லாமல் இருந்தால் சரி என்றே பலரும் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











