Don't Miss!
- News
"ஹோப்".. 2 பேருக்கு போனை போட்ட ஸ்டாலின்.. "புரியுதா? அது போதாது".. பறந்த உத்தரவு.. மலைத்த "புள்ளி"
- Lifestyle
உங்க ழுழங்காலில் இந்த அறிகுறிகள் இருந்தா... அது ஆபத்தானதாம்...உங்களால நடக்க முடியாம கூட போகலாமாம்!
- Technology
உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!
- Finance
ரத்தகளறியான அதானி குழும பங்குகள்.. 20 சதவீதம் வரையில் சரிவு..!
- Sports
"நீங்க கொஞ்சம் முன்னேறனும்பா".. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட்.. விராட் கோலிக்கு கங்குலி முக்கிய அட்வைஸ்!
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அரபிக்குத்து பாடல் சர்ச்சை.. இதெல்லாம் ஒரு குத்தமா?... பதிலடி கொடுத்த விஜய் ரசிகர்கள் !
சென்னை : இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ்புக், தொலைக்காட்சி என எந்த பக்கம் சென்றாலும் ஹலமதி ஹபிபோ.... ஹலமதி ஹபிபோ... என் பாடல் அனைவரையும் ஆட்டம் போட வைத்துள்ளது.
அரபிக்குத்து பாடல் இணையத்தில் தாறுமாறாக ஹிட்டடித்து வரும் நிலையில் இந்த பாடல் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.
இணையத்தில் எழுந்த சர்ச்சைக்கு விஜய்யின் ரசிகர்கள் சரியான பதிலளித்து வருகின்றனர்.
பச்சை நிறமே பச்சை நிறமே.. பச்சை உடையில் பப்ளியாக போஸ் கொடுத்த மஞ்சிமா மோகன்!

பீஸ்ட்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் தயாராகி வருகிறது. இதில், பூஜா ஹெக்டே, யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட நாட்களுக்குப்பின் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் பூஜா ஹெக்டே இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஹலமதி ஹபிபோ....
மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் பீஸ்ட் திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் லிரிக் வீடியோ வெளியானது. சிவகார்த்திகேயன் பாடல் வரியில் அனிருத்தின் துள்ளலான இசையில், அனிருத் மற்றும் செல்லம்மா பாடல் புகழ் ஜோனிட்டா காந்தி ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர்.

சர்ச்சை
வழக்கமாக நடனத்தில் பட்டையை கிளப்பும் விஜய், இந்த பாடலில் அட்டகாசப்படுத்தி இருப்பார். இந்த பாடலுக்கு ஏற்றார் போல் விஜய் காஸ்டிமும் தாரமாக இருக்கும். அந்த பாடலில் உடைக்கு ஏற்றால் போல விஜய் தனது கழுத்தில் சிலுவை போன்ற டாலரை அணிந்து இருப்பார். இதைப்பார்த்த பலர் அந்த புகைப்படத்தை வட்டமிட்டு இதை தவிர்த்து இருக்கலாம் என்பது போல கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
Recommended Video

இது ஒரு குத்தமா
இதனால், கடுப்பான விஜய்யின் ரசிகர்கள், இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்றும், நன்றாக பாருங்கள் அது சிலுவை அல்ல நங்கூரம் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும், காஸ்டியூமுக்கு ஏற்ற மாதிரி டாலர் போட்டது ஒரு குத்தமா என கமெண்ட்டுகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.