Vote For TVKனு கேட்ட விஜய் ரசிகர்கள்.. விஜய் ஸ்டைலில் முத்தம் கொடுத்த நடிகர்.. அடடே இது நல்லாருக்கே!

சென்னை: நடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக செயல்படத் தொடங்கியதில் இருந்தே நடிகர் விஜய்க்கு ஆதரவான மற்றும் எதிரான நிலைப்பாடுகளை திரையுலகத்தைச் சார்ந்த பலரும் எடுத்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடிகர் ஜெய் ஐபிஎல் போட்டியை பார்க்க வந்தபோது, அவரைப் பார்த்த விஜய் ரசிகர்கள் சிலர் ஜெய்யை நோக்கி, Vote For TVK என்று கத்தினார்கள். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத நிலையில், ரசிகர்களை நோக்கி, விஜய் ஸ்டைலில் பறக்கும் முத்தத்தை பறக்கவிட்டார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் விஜய்க்கு அவரது அரசியல் நடவடிக்கைகளால் தமிழ் சினிமா பிரபலங்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்து வருகிறது. அவரது விவாகரத்து சர்ச்சைக்குப் பின்னர், நடிகை த்ரிஷாவுடன் இணைந்து திருமண நிகழ்ச்சிக்குச் சென்றார். அதற்கு திரைத்துறையில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படி இருக்கையில் நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நடிகர் ஜெய், நடந்து கொண்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடிகர் ஜெய் ஐபிஎல் போட்டியை பார்க்க வந்தபோது, அவரைப் பார்த்த விஜய் ரசிகர்கள் சிலர் ஜெய்யை நோக்கி, Vote For TVK என்று கத்தினார்கள். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத நிலையில், ரசிகர்களை நோக்கி, விஜய் ஸ்டைலில் பறக்கும் முத்தத்தை பறக்கவிட்டு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

Vijay Fans Request Vote For TVK At CSK Match To Actor Jai reactions Attracts Fans

அதேபோல் சமீபத்தில் திரைத்துறையில் இருந்து விஜய்யை நோக்கி முன் வைக்கப்பட்ட விமர்சனம் என்றால் அது, இயக்குநர் சேரன் எழுப்பிய கேள்விகள் தான். இயக்குநர் சேரன் தனது எக்ஸ் பக்கத்தில், " புதுசா கட்சி ஆரம்பிச்சு மக்கள்கிட்ட ஓட்டு கேட்க வந்தா மக்களுக்கு என்ன பிரச்னை இருக்கு அதை தனது கட்சி எப்படி தீர்க்கும், நாட்டில் என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் .. அதற்கு தன்கிட்ட என்ன என்ன திட்டங்கள் இருக்குன்னு பேசனுமா, இல்ல உங்களுக்கு ஸ்டாலின் வேணுமா இல்ல நான் வேணுமான்னு கேட்டா அந்த தகுதி போதுமா ஒரு நாட்டை ஆள?.. உங்க இருவருக்கும் என்ன பிரச்னைன்னு எங்களுக்கு தெரியல.. உங்க ரசிகர்களுக்கே தெரியாதுன்னு நினைக்கிறேன்.. அது என்ன எப்ப வந்தாலும் ரெண்டு கட்சிக்குத்தான் போட்டி... அப்படி என்ன உங்களுக்கு திமுக மேல கோபம்னு எங்களுக்கும் சொல்லுங்க விஜய்... நாங்களும் சப்போர்ட் பன்றோம்..

புதிய மாற்றம்: சொல்லாம நீங்க மட்டும் சினிமா டயலாக் பேசுனா ஏன் ஓட்டு போடனும்னு மக்கள் கேக்குறாங்கள்ல.. இங்க ஐம்பது வருஷமா இருக்க கட்சிகள் மற்றும் பதினைந்து வருஷமா மக்களோட மக்களா களத்துல நின்னு போராடி, புதிய மாற்றத்தோடு தமிழகத்தை உருவாக்க மக்கள்கிட்ட வாக்கு சேகரிக்கும் கட்சிகள் எல்லாம் நிறைய இருக்கு.. எந்த விதத்துல நீங்க அந்த கட்சிகளை விட உயர்வு சொல்லுங்க... எந்த போராட்டத்துல மக்களுக்காக மக்கள் கூட நின்னு இருக்கீங்க இங்க ரெண்டு கட்சிக்குத்தான் போட்டின்னு சொல்ல.

Vijay Fans Request Vote For TVK At CSK Match To Actor Jai reactions Attracts Fans

மக்கள் தலைவன்: மனசாட்சி இல்லைன்னா நீங்க எப்படி மக்கள் தலைவனா மாறுவீங்க விஜய்... உழைப்பை முதல்ல மதிங்க... உங்க கவர்ச்சி மட்டும் மக்களுக்கான அரசியல் இல்ல... இனிமேலும் மக்கள் கிட்ட வீர வசனம் மட்டும் பேசாம ஒழுங்கா உங்க கட்சியோட கொள்கை திட்டம் எல்லாம் எல்லா இடத்துலயும் பேசுங்க.. ஒவ்வொரு தொகுதிலயும் என்ன பிரச்னைன்னு அலசி ஆராய்ங்க... பொதுவா வீராவேசமா பேச இது அரட்டை அரங்கம் இல்லை... மக்கள் களம்... ஏற்கனவே நாங்க 50 வருடத்தை இழந்துட்டு இருக்கோம்.. இப்போ நீங்க வந்து ஆட்டத்தை கலைக்காதிங்க.. மறுபடியும் மக்கள் பிரச்னை உணராத முதல்வர் எங்களுக்கு வேண்டாம். மக்களோடு மக்களாக நின்று எங்களை, எங்கள் இளைய தலைமுறையை வழிநடத்தும் தலைமையே எங்களுக்கு வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X