அப்ப பீஸ்ட் படத்துல.. இப்படியொரு சீனை வையுங்க.. இயக்குநர் நெல்சனுக்கு குவியுது கோரிக்கை!

சென்னை: பீஸ்ட் படத்தின் ஆரம்ப காட்சியில் நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் வருவது போல காட்சி வைக்க வேண்டும் என இயக்குநர் நெல்சனுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சொகுசு காருக்கு வரி விலக்கு கோரி நடிகர் விஜய் தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

அந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை விதித்து சில அறிவுரைகளையும் வழங்கி இருப்பது இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

வி சப்போர்ட் விஜய்

வி சப்போர்ட் விஜய்

நடிகர் விஜய்யின் ஹேட்டர்கள் பலரும் விஜய்க்கு எதிரான ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்த நிலையில், தளபதி ரசிகர்கள் #WeSupportThalapathyVijay என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், நடிகர் விஜய் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்றும் வரி விலக்கு கோரி தான் வழக்குத் தொடர்ந்திருந்தார் என்றும் ஆதாரங்களை அடுக்கி வருகின்றனர்.

1.30 கோடி நிதியுதவி

1.30 கோடி நிதியுதவி

நடிகர் விஜய் கொரோனா முதல் அலையின் போது 1.30 கோடி ரூபாய் கொரோனா நிதியுதவி வழங்கி இருந்தார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம், தமிழ்நாடு முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம், கேரள முதல்வர் நிவாரண நிதி என அந்த பணத்தை பிரித்துக் கொடுத்திருந்தார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அந்த அபராத தொகை ஒரு லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கும் படி நீதிபதி உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒன்றும் புதிதல்ல

இது ஒன்றும் புதிதல்ல

நடிகர் விஜய்க்கு இது போன்ற பிரச்சனை வருவது ஒன்றும் புதிதல்ல என்றும், அவர் அதனை தனது ஸ்டைலில் எதிர்கொண்டு மீண்டு வருவார் என்றும் தளபதி ரசிகர்கள் விஜய்க்கு பக்கபலமாக துணை நின்று தங்கள் குரல்களை கொடுத்து வருகின்றனர்.

கோஸ்ட் உடன் பீஸ்ட்

கோஸ்ட் உடன் பீஸ்ட்

பீஸ்ட் படத்தின் ஆரம்ப காட்சியில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் நடிகர் விஜய் வருவது போல காட்சியை வைங்க நெல்சன் என இயக்குநர் நெல்சனுக்கு தளபதி ரசிகர்கள் சார்பாக கோரிக்கைகள் பறக்கின்றன. மேலும் நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் உடன் இருக்கும் புகைப்படங்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X