சிவகார்த்திகேயன் விளக்கம் கொடுத்தும் விஜய் ரசிகர்கள் இப்படி செய்யலாமா?.. இதெல்லாம் ரொம்ப மோசம் பாஸ்
சென்னை: விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படம் ஒன்பதாம் தேதியும், சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி படம் பத்தாம் தேதியும் ரிலீஸாகவிருக்கின்றன. இரண்டு படங்களுக்கிடையிலான போட்டியில் யார் வெல்வார் என்ற கேள்வி பலரிடம் எழுந்திருக்கிறது. விஜய் ரசிகர்களை பொறுத்தவரை இந்தப் போட்டியை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றே தெரிகிறது. இதன் காரணமாக அவர்கள் எல்லை மீறி சில செயல்களை செய்ய தொடங்கிவிட்டார்கள்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான் என்பதை நேற்று வெளியான ட்ரெய்லரை வைத்து ரசிகர்கள் உறுதியாக தெரிந்துகொண்டார்கள். ஒரு படத்தின் ரீமேக்கிற்கா இவ்வளவு பில்ட் அப்பை கொடுத்தார்கள் என்று பலரும் பேசுகிறார்கள். அதேசமயம் வினோத் இப்படத்தை இயக்கியிருப்பதன் காரணமாக கொஞ்சம் நம்பிக்கையையும் அவர்கள் வைத்திருக்கிறார்கள். ஒன்பதாம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது.
பராசக்தி ஒரிஜினல்: ஆனால் சிவகார்த்திகேயனின் படம் ரீமேக் இல்லை. அது ஒரிஜினல் கதையாக உருவாகியிருக்கிறது. முக்கியமாக மொழி போரை மையப்படுத்திதான் இந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்கியிருக்கிறார். சென்சிட்டிவ் சப்ஜெக்ட்டை கமர்ஷியலாக இயக்குநர் உருவாக்கியிருப்பதால்; நிச்சயம் இதுவும் பந்தயம் அடிக்கும் என்பது எஸ்கே ரசிகர்களின் நம்பிக்கை. படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது. பத்தாம் தேதி படம் ரிலீஸாகிறது.

ஜனநாயகன் Vs பராசக்தி: இரண்டு படங்களும் அடுத்தடுத்து நாட்களில் ரிலீஸாவதன் காரணமாக இப்படத்தில் விஜய் Vs சிவகார்த்திகேயன் என்ற நிலைமை உண்டாகியுள்ளது. சிவகார்த்திகேயன்தான் வேண்டுமென்றே இந்தப் போட்டியை உருவாக்கியிருக்கிறார் என்றெல்லாம் பலரும் கொளுத்திப்போட்டார்கள். இதனால் அவர் மீதும் அவரது ரசிகர்கள் மீதும் விஜய் ரசிகர்களில் ஒருதரப்பினர் தொடர்ந்து சோஷியல் மீடியாக்களில் தாக்குதலை நடத்திவருகிறார்கள்.
விளக்கமளித்த சிவா: ஆனால் நேற்று நடந்த பராசக்தி ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், 'முதலில் நாங்கள் பராசக்தி ரிலீஸை தீபாவளிக்குத்தான் பிளான் செய்திருந்தோம். பிறகு விஜய் அண்ணாவின் படம் அக்டோபர் என்று சொன்னதால் பொங்கலுக்கு போகலாம் என்று தயாரிப்பாளரிடம் சொல்லி அதற்கு பிளான் செய்தோம். ஆனால் ஜனநாயகனும் பொங்கலுக்கு என்று சொன்னதும் ஜெர்க் ஆகிவிட்டேன்.
விஜய் சொன்னது: உடனே நான் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷுக்கு ஃபோன் செய்து ஜனநாயகனும், பராசக்தியும் பொங்கலுக்கு வருகிறதே என்று கேட்டேன். இரண்டு படங்கள்தானே வரலாம். பிரச்னையில்லை என்று சொன்னார். உங்களுக்கு பிரச்னை இல்லை. எனக்குத்தான். நீங்கள் விஜய் அண்ணாவிடம் பேசுங்கள் என கூறினேன். அவரும் பேசிவிட்டு, 'பிரச்னையில்லை தாராளமாக வரட்டும். எஸ்கேவுக்கு எனது வாழ்த்துகளை சொல்ல சொன்னார் என்றார். ஆனால் இடையில் பலர் எதையோ பேசுகிறார்கள். மக்களே 33 வருடங்கள் நம்மை என்ட்டெர்டெயின் செய்தவர் விஜய் அண்ணா. ஒன்பதாம் தேதி ஜனநாயகனை கொண்டாடுங்க. இது அண்ணன், தம்பி பொங்கல்தான்' என்றார்.
பேனரை கிழித்த விஜய் ரசிகர்கள்: இந்த போட்டி குறித்து இவ்வளவு பக்குவமாக சிவா விளக்கமளித்தாலும்; விஜய் ரசிகர்களில் சிலரால் சிவா போட்டிக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் நேற்று திரையரங்கு ஒன்றில் ஜனநாயகன் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அதை காண்பதற்கு ரசிகர்கள் சென்றபோது அங்கிருந்த பராசக்தி பேனரை கிழித்து எறிந்தார்கள். இதுதொடர்பான வீடியோ இப்போது வைரலாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











