வாடா பார்ப்போம்னு சொல்லவே இல்லை.. ஜூலிக்கு குறும்படம் போட்ட விஜய் ரசிகர்கள்.. இப்படி ஆகிடுச்சே!

சென்னை: திமுகவுக்கு ஆதரவாகவும் தவெகவுக்கு எதிராகவும் விரமங்கையாக மீண்டும் களத்தில் குதிக்கிறேன் என குதித்த பிக் பாஸ் ஜூலி நேற்று திடீரென பிரஸ் மீட் வைத்து தனக்கு மிஸ் கேரேஜ் ஆனதுக்கு காரணமே விஜய் தான் என அபாண்டமான பழியை தூக்கி சுமத்த பத்திரிகையாளர்களே கேள்விகளால் ஜூலியை துளைத்து எடுத்து விட்ட வீடியோக்களை விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்த நிலையில், முதல் முறையாக கட்சியை தொடங்கி தேர்தலை சந்தித்த தவெக தலைவரும் நடிகருமான விஜய் வெற்றிப் பெற்று முதலமைச்சராக மாறியுள்ளார்.

Vijay Fans roast Bigg Boss Julie with New Kurumpadam after her press meet

பெரம்பூர் தொகுதியிலேயே விஜய்யை தோற்கடிப்பேன் தைரியம் இருந்தா நேரில் வாடா பார்ப்போம் என ரொம்பவே மோசமான முறையில் ஜூலி நடத்திய பிரச்சாரங்கள் அவருக்கு மட்டுமின்றி பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்த்து போட்டியிட்டவர்களுக்கு பேக் ஃபயர் ஆகிவிட்டது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஜூலி, தான் ஒருமையில் விஜய்யை பேசவே இல்லை என்றும் வா அண்ணே பார்ப்போம் என்று தான் பேசினேன் என்று பேசிய நிலையில், விஜய் ரசிகர்கள் குறும்படங்களை சோஷியல் மீடியாவில் போட்டு பொளக்க ஆரம்பித்து விட்டனர்.

யாகாவாராயினும் நா காக்க: சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி எந்தவொரு தனிமனிதராக இருந்தாலும் மற்றவர்கள் பற்றி விமர்சிக்கும் போது நா காக்க வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் கஷ்டப்பட வேண்டும் என விஜய் ரசிகர்கள் ஜூலியை ரோஸ்ட் செய்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே ஜூலிக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை என்றும் கமல்ஹாசனின் குறும்படத்திலேயே அவர் பொய் பேசி மாட்டிக்கொண்டார். தற்போது மீண்டும் பொய் பேசி சிக்கிக் கொண்டாரே என கலாய்த்து வருகின்றனர்.

வாடா பார்ப்போம்னு சொல்லல: பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்பாகவே பெரம்பூரில் பிரச்சாரத்தை தொடங்கிய ஜூலி வாடா பார்ப்போம் என விஜய் குறித்து பேசிய நிலையில், அப்போதே விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் ஜூலியை கடுமையாக திட்டி வீடியோக்களை வெளியிட்டனர். இந்நிலையில், வாடா பார்ப்போம்னு சொல்லவே இல்லை என்றும் வா அண்ணே பார்ப்போம் என்றுதான் சொன்னேன் என ஜூலி பேசிய நிலையில், இது அப்பட்டமான பொய் என குறும்படம் போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X