ஜன நாயகன் படத்தோட ரீஃபண்ட் தான் பராசக்தி வசூல்.. ஆட தெரியாத சிலுக்கு காலுல சுளுக்குன்னு சொன்னாளாம்!
சென்னை: சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் மாணவர்கள் நடத்திய புரட்சி போராட்டத்தை அடிப்படையாக உருவான பராசக்தி திரைப்படம் கடந்த ஜனவரி 10ம் தேதி திரைக்கு வந்தது. சனிக்கிழமை வெளியான அந்த படம் சனி மற்றும் ஞாயிறு என 2 நாட்களும் சிறப்பாகவே ஓடியது.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பராசக்தி திரைப்படம் முதல் நாளில் 27 கோடி ரூபாய் வசூல் என்றும் 2வது நாளில் ஒட்டுமொத்தமாக 51 கோடி என்றும் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டார். மேலும், சிவகார்த்திகேயன், சுதா கொங்கராவை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வெற்றியையும் கொண்டாடினார்.

ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சியும் நேற்று சென்னையில் நடைபெற்றது. ஜன நாயகன் படம் வெளியாகாமல் சோலோ ரிலீஸாக தமிழ்நாட்டில் அதிகப்படியான திரையரங்குகளில் வெளியான பராசக்தி திரைப்படம் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மிகப்பெரிய சரிவை சந்தித்த நிலையில், அதற்கு விஜய் ரசிகர்கள் தான் காரணம் என்பது போல சுதா கொங்கரா அளித்த பேட்டி தீ பரவி தற்போது ஏகப்பட்ட ட்ரோல்களை சுதா கொங்கராவுக்கு எதிராகவும் பராசக்தி படத்துக்கு எதிராகவும் பதிவிட்டு வருகின்றனர்.
திமுக - காங்கிரஸ் மோதல்: இந்திரா காந்தியையும் காங்கிரஸ் கட்சியினரையும் பராசக்தி படத்தில் சுதா கொங்கரா வச்சு செய்து விட்டார் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அண்ணா மற்றும் கருணாநிதியை மட்டுமே பராசக்தி படத்தில் ஹைலைட் செய்துக் காட்டிய நிலையில், கமல்ஹாசனும் இது திமுகவின் அரசியல் பிரச்சார முரசொலியாக மாறிவிட்டது என பகிரங்கமாகவே ட்வீட் போட்டார். இன்னொரு பக்கம் ராகுல் காந்தி பராசக்தியை கண்டுக்கொள்ளாமல் ஜன நாயகன் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் பாஜக தடுக்கிறது என ட்வீட் போட்டதும் பெரிய விவாதத்தை கிளப்பியது.
50 கோடி கூட வரல: பராசக்தி திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் 51 கோடி வசூல் என அறிவித்த தயாரிப்பாளர் 3வது நாள் வசூலை நேற்று அறிவிக்கவே இல்லை. சாக்னிக் உள்ளிட்ட பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர் தளங்களில் பராசக்தி திரைப்படம் முதல் நாளில் 12.5 கோடி ரூபாய் வசூலும், 2வது நாளில் 10.10 கோடி ரூபாய் வசூலும் ஈட்டிய நிலையில், 3வது நாளில் வெறும் 3 கோடி மட்டுமே வசூல் ஈட்டியது. 4வது நாளான நேற்று 2.40 கோடியாக வசூல் குறைந்துவிட்டது. ஒட்டுமொத்தமாக இதுவரை இந்தியளவில் 28 கோடி ரூபாய் வசூலை மட்டுமே பராசக்தி ஈட்டியுள்ளது. ஓவர்சீஸில் 22 கோடி ரூபாய் வசூல் எல்லாம் வர சான்ஸே இல்லை என்றும் அதிகபட்சமாக 50 கோடி வசூலை கூட படம் தொட்டிருக்காது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். படக்குழுவும் தொடர்ந்து புலம்ப காரணமும் பராசக்தி பாக்ஸ் ஆபீஸில் வாங்கிய அடி தான் காரணம் என்கின்றனர்.
ஜன நாயகன் ரீஃபண்ட் காசு: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாக ஓவர்சீஸில் டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டு பெரும் தொகை அட்வான்ஸ் புக்கிங்காக வந்தது. படம் திட்டமிட்டபடி வெளியாகாத நிலையில், சுமார் 50 கோடி ரூபாயை ரீஃபண்ட் செய்தனர். பராசக்தி படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எங்க படம் ரீஃபண்டாக கொடுத்த பணம் என விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஆட தெரியாத சிலுக்கு: விஜய் ரசிகர்கள் தான் பராசக்தி படத்தின் தோல்விக்கு காரணம் என சுதா கொங்கரா பேசியதாக வெளியான தகவல்களை தொடர்ந்து அவரை ஏகப்பட்ட நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். "ஆடத்தெரியாத சிலுக்கு காலுல சுளுக்குனு சொன்னாளாம்.. அந்த மாதிரி இருக்கு சுதா கொங்கார மேடம் சொல்றது... " என பங்கமாக கலாய்த்து வருகின்றனர். மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா நடித்த ஆயுத எழுத்து படத்தின் காட்சிகளை பதிவிட்டு இன்டென்ஸ் நடிப்புன்னா இப்படி இருக்கணும்னும் பாடம் நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











