புதுவையைக் கலக்கும் "இளைய தளபதி" பஸ்.. அடேங்கப்பா விஜய் ரசிகர்கள்

Recommended Video

புதுவையைக் கலக்கும் 'இளைய தளபதி' பஸ்..வீடியோ

புதுச்சேரி: நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் விஜய் படங்கள் ஒட்டப்பட்ட பேருந்தில் இன்று ஒருநாள் முழுவதும் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கோலாகலாக கொண்டாடி வருகின்றனர். விஜய் நடித்து வரும் புதிய படத்தின் முதல் லுக், 2வது லுக் மற்றும் படத்தின் பெயர் ஆகியவை நேற்று அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டன.

vijay fans rock with colorful bus in puducherry

இதன் மூலம் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் தொடங்கியது. நேற்று தொடங்கிய இந்த கொண்டாட்டம் இன்று உச்சத்தை எட்டியது.

vijay fans rock with colorful bus in puducherry

நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கேக் வெட்டியும் அவரது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் விஜய் பிறந்தநாளையொட்டி தனியார் பேருந்து ஒன்றில் வித்தியாசமான முறையில் பேருந்து முழுவதும் விஜய் படங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டி பிறந்தநாளை கொண்டாடினர்.

vijay fans rock with colorful bus in puducherry


மேலும் விஜய் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள பேருந்தில் புதுச்சேரி - பாகூர் வழித்தடத்தில் இன்று ஒருநாள் முழுவதுமாக பொதுமக்கள் இலவசமாக பயணம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் வில்லியனூர் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் போக்கிரி திரைப்படத்தை இலவசமாக காண்பதற்கு விஜய் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X