‘தலைவா’ தமிழகத்தில் ரிலீஸ் இல்லை… கர்நாடகா, கேரளா, ஆந்திரா படையெடுக்கும் விஜய் ரசிகர்கள்

By Mayura Akilan

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள "தலைவா" படம் தமிழக தியேட்டர்களில் இன்று ரிலீசாகாக காரணத்தால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள், அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவுக்கு படம் பார்க்க படையெடுக்கின்றனர்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய்- அமலாபால் நடித்துள்ள படம் "தலைவா". இந்த படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 500 தியேட்டர்களில் படத்தை திரையிட திட்டமிட்டப்பட்டு இருந்தது. இதனால், ரசிகர்கள் தியேட்டர்களில் விஜய்யின் கட் அவுட்கள் மற்றும் கொடி தோரணைகள் கட்டி திருவிழா போல கொண்டாட முடிவு செய்திருந்தனர்.

வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல்

"தலைவா" படத்தை திரையிடக்கூடாது என்று திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதனால், அதிர்ச்சி அடைந்த தியேட்டர் அதிபர்கள், பாதுகாப்பு கோரினர். ஆனால் போலீசார் கைவிரித்து விடவே திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திரையிட முடியாது

திரையிட முடியாது

இந்த பிரச்னை குறித்து அபிராமி ராமநாதன் தலைமையில், தியேட்டர் உரிமையாளர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். நள்ளிரவு வரை நீடித்த இந்த கூட்டத்தில், திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளித்தால் மட்டுமே படத்தை திரையிடுவது என முடிவு எடுக்கப்பட்டது. இதனால் ‘தலைவா' தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இன்று வெளியாகவில்லை.

வரி விலக்கு கோரிக்கை

வரி விலக்கு கோரிக்கை

இந்த நிலையில், ''தலைவா'' படத்துக்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்திருந்ததால் வரிவிலக்கு குழுவினருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த அக்குழுவினர், சில காட்சிகளுக்கும், விஜய் பேசும் சில வசனங்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்தனர். அதை நீக்க தலைவா தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொண்டதாக தெரிகிறது. எனினும் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

படம் வெளியாக இருந்த தியேட்டர்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது, அதில், "தலைவா" திரைப்பட இன்றைய காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்" என்று கூறப்பட்டிருந்தது. இதனால், தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வெளிமாநிலங்களில்

வெளிமாநிலங்களில்

அண்டை மாநிலமான கேரளாவில் 150 தியேட்டர்களிலும், ஆந்திரா 300 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 150 தியேட்டர்களிலும், மும்பையில் 100 தியேட்டர்களிலும் ‘தலைவா' படம் இன்று வெளியானது.

படையெடுக்கும் ரசிகர்கள்

படையெடுக்கும் ரசிகர்கள்

இதனால், விஜய் ரசிகர்கள் கார், வேன்களில் கேரளா, ஆந்திராவுக்கு படம் பார்க்க சென்றனர். இதனால் எல்லையோர தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியது. இதனையடுத்து, சுமாராக ஓடிய தெலுங்கு, மலையாள படங்களை மாற்றிவிட்டு பல தியேட்டர் அதிபர்கள் 'தலைவா' படத்தை திரையிட்டனர்.

வெளிநாடுகளில்

வெளிநாடுகளில்

மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் ‘தலைவா' வெளியாகியுள்ளது. ஆனால், தமிழகத்தில் ‘தலைவா' படம் எப்போது வெளியாகும் என்று உறுதியாக தெரியவில்லை. விஸ்வரூபம் பிரச்சினை போல தலைவா பட பிரச்சினையும் விஸ்வரூபம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X