லியோ முதல் 10 நிமிஷம்.. மெர்சல் ஆக்கிட்டாங்க..தியேட்டருக்குள் தலைதெறிக்க ஓடிய பேன்ஸ்!
சென்னை: லியோ படத்தில் முதல் 10 நிமிட காட்சி சும்மா மெர்சலா இருக்கு என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
லியோ திரைப்படத்தை ரசிகர்கள் திருவிழாப்போல கொண்டாடி வருகின்றனர். படம் வெளியான அத்தனை தியேட்டரில் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் கூட்டம் நிரம்பி வழிகிறது.

படம் பார்த்த ரசிகர்கள் பலர் சோஷியல் மீடியாவே திணறும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜின் லியோ: லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். கில்லி படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். அவர்களுடன் கௌதம் மேனன், பிரியா ஆனந்த் , மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் கமல் கேமியோ ரோலில் நடித்து இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் படத்தில் அவரின் வாய்ஸ் மட்டும் இடம் பெற்றுள்ளது.
அலறிய திரையரங்கு: படத்தில் இருந்து நா ரெடிதான் வரவா, பேட் ஆஸ், அன்பெனும் ஆயுதம் என்று 3 பாடல்கள் இதுவரை வெளியாகி இருந்தன. பலரின் ரிங்டோனாக மாறிய நா ரெடிதான் பாடல், தியேட்டரில் வந்ததும் ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து ஆட்டம் போட்டு திரையரங்கையே அலறவிட்டனர். படத்தின் முதல் பாதி சூப்பர் என்று ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தலைதெறிக்க ஓடிவந்த ரசிகர்கள்: மேலும், லியோ படத்தில் முதல் பத்து நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ள நிலையில், அதனைக் கண்டிப்பாக பார்த்துவிட வேண்டும் என துடிக்கும் ரசிகர்கள் படம் திரையிடுவதற்கு முன்பாகவே வந்து சீட்டில் அமர்ந்துவிட வேண்டும் என தலைதெறிக்க தியேட்டருக்குள் ஓடிவந்து படத்தை பார்த்தனர்.
முதல் பத்து நிமிஷம்: முதல் பத்து நிமிஷத்தை பார்க்க ஓடிவந்து வந்ததுடன், விஜய்யின் படத்தில் இதுவரை இல்லாத ஒரு வெரைட்டி பாட்டு மற்றும் சண்டை இருக்கு, அனிருத்தின் இசை அருமையா இருக்கு. முதல் பத்து நிமிஷம் லோகேஷின் மேக்கிங் ஸ்டைல் மெர்சலா இருக்கு அந்த அனுபவத்தை தியேட்டருக்கு வந்து தான் பார்க்க வேண்டும் என்றனர்.


Click it and Unblock the Notifications











