மெர்சல் வீரனை பற்றி 13 வருஷத்துக்கு முன்பே கமல் சொல்லிட்டாரு, ஆண்டவர் ஜீனியஸ்
சென்னை: கமல் ஹாஸன் ஒரு ஜீனியஸ் என்று மெர்சல் சர்ச்சை பற்றி விஜய் ரசிகர்கள் பெருமையாக கூறி வருகிறார்கள்.
மெர்சல் படத்தில் விஜய் பேசிய வசனங்களை பார்த்து டாக்டர்கள் கொந்தளித்தனர். மெர்சல் பட லிங்கை பகிர்ந்து அதன் வசூலை கெடுப்போம் என்று டாக்டர்கள் சங்கம் தெரிவித்தது.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் வீடியோ ஒன்றை பகிர்ந்து வருகிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு கமல் பேசிய அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது,
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.னு டாக்டர்களுக்கு கோபம் வந்துடுச்சு. போடக் கூடாது என்று படத்தை நிறுத்தினாங்க. இன்னைக்கு சொல்கிறேன் வசூல் பண்ணாம ஃப்ரீயா பண்ணுகிற டாக்டர்கள் எத்தனை பேர் இருக்காங்க?
அரசு வேலையில் இருந்து கொண்டு தனியாக கிளினிக் வைக்காத டாக்டர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?. நான் வேண்டுமானால் தோத்துப் போயிடலாம். இன்னொரு வீரன் வருவான் என்றார்.
Comments


Click it and Unblock the Notifications