ரோலக்ஸோட அப்பாவே ஹரோல்ட் தாஸ் தானாம்.. என்னடா புதுசா உருட்டுறீங்க.. லியோவை எல்சியூவில் கோர்த்தாச்சு!
சென்னை: லியோ படத்தின் ஆண்டனி தாஸ் க்ளிம்ப்ஸ் கொண்டாடப்பட்ட நிலையில், அர்ஜுனின் ஹரோல்ட் தாஸ் லுக்கை பார்த்த ரசிகர்கள் என்ன லோகேஷ் கனகராஜ் அப்படியே விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை சுட்டு வச்சிருக்கீங்க என ஒரு பக்கம் சூர்யா ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதை எப்படியாவது சமாளிக்க வேண்டுமே என முடிவெடுத்த விஜய் ரசிகர்கள் ரோலக்ஸின் அப்பாவே ஹரோல்ட் தாஸ் என மிகப்பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளனர்.

லியோ படம் வரும் வரை ஏகப்பட்ட கதைகள் உலாவும் என்பதை யாருமே தடுக்க முடியாத சூழலில் இப்படியொரு புதிய உருட்டு ஒன்று கோலிவுட் கோட்டை சமஸ்தானத்தையே ஆடச் செய்துள்ளது.
லியோ எல்சியூ தானா: லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸ் படங்களாக கைதி, விக்ரம் மாறிய நிலையில், விஜய்யின் லியோ படமும் எல்சியூ தான் என்றும் விக்ரம் படத்தில் நடித்த பலரும் லியோ படத்தில் நடித்து வருகின்றனர். பகத் ஃபாசில், கமல், சூர்யா எல்லாம் கிளைமேக்ஸில் வருவார்கள் என ஏகப்பட்ட பிட்டுகள் ஓட்டப்பட்டு வருகின்றன.

மேலும், லோகேஷ் கனகராஜின் மேக்கிங் ஸ்டைல் மற்றும் லியோ க்ளிம்ப்ஸ் காட்சிகளையும் கம்பேர் செய்து அதே மாதிரி தான் இதுவும் இருக்கு இது கண்டிப்பாக எல்சியூ தான் என ரசிகர்கள் அடித்துச் சொல்கின்றனர்.

ரோலக்ஸ் காப்பி: நடிகர் அர்ஜுனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தற்போது வெளியான ஹரோல்ட் தாஸ் க்ளிம்ப்ஸ் பார்த்த சூர்யா ரசிகர்கள் ரொம்பவே கடுப்பாகி விட்டனர். அப்படியே ரோலக்ஸ் சூர்யாவின் காட்சியை காப்பியடித்து லோகேஷ் கனகராஜே இயக்கி இருக்காரே என்று தங்கள் அதிருப்தியையும் கொட்டி வருகின்றனர்.
மேலும், ஒரே ரோலக்ஸ் எங்க சூர்யா தான் என்றும் அவரது கதாபாத்திரத்தை போல இனிமேல் லோகேஷ் கனகராஜே நினைத்தாலும் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க முடியாது என சூர்யா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஹரோல்ட் தாஸ் அப்பா: ரோலக்ஸின் அப்பாவே அர்ஜுன் ஹரோல்ட் தாஸ் என விஜய் ரசிகர்கள் புதுக்கதையை உருட்டி இந்த படத்தை எல்சியூவுக்குள் கொண்டு வந்து விட்டனர். ரோலக்ஸ் தாஸ் என்பது தான் அவரது முழுப் பெயர் என்றும் சஞ்சய் தத், அர்ஜுன் தம்பி லியோ தாஸ் என்றும் இந்த படம் விக்ரம் படத்தின் ப்ரீக்வெல் என ஏகப்பட்ட கதைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











