twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மின்சார கண்ணா படத்தை பார்த்து இன்ஸ்பையரானாரா பாராசைட் இயக்குநர்? மார்தட்டும் விஜய் ஃபேன்ஸ்!

    |

    Recommended Video

    Oscar 2020 | The Biggest Moment | Oscar Award

    சென்னை: 4 ஆஸ்கர் விருதுகளை குவித்துள்ள தென்கொரியாவின் பாராசைட் திரைப்படம் விஜய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா படத்தை பார்த்து எடுக்கப்பட்டது என மார்தட்டி வருகின்றனர் விஜயின் ரசிகர்கள்.

    உலக சினிமாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது ஆஸ்கர் விருது விழா.

    இதில் தென் கொரிய படமான பாராசைட் படம் 4 ஆஸ்கர் விருகளை வென்று அசத்தியிருக்கிறது. சிறந்த திரைக்கதை, சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த இயக்குநர், சிறந்த படம் என 4 விருதுகளை பாராசைட் படம் குவித்திருக்கிறது.

    விஜய் படம்

    விஜய் படம்

    இந்நிலையில் பாராசைட் படம் விஜய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா படத்தை ஒத்திருப்பதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 1999ஆம் ஆண்டு இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய், ரம்பா, குஷ்பு, மணிவண்ணன், கோவை சரளா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருப்பார்கள்.

    காதலுக்காக

    காதலுக்காக

    இதில் தொழிலதிபரான குஷ்புவின் வீட்டில் தனி ஆளாக வேலைக்கு சேருவார் பணக்கார வீட்டு பையனான நடிகர் விஜய். பின்னர் அங்கு பணிபுரியும் ஒவ்வொரு ஆளாக காலி செய்துவிட்டு, தனது குடும்பத்தை சேர்ந்த ஆட்களை பணியில் அமர்த்துவார். தனது காதலுக்காக இப்படி ஒரு வேலையை செய்வார் நடிகர் விஜய். இந்த படம் அப்போது நல்ல வரவேற்பை பெற்றது.

    பாராசைட்

    இந்நிலையில் ஆஸ்கர் விருது விழாவில் நான்கு விருதுகளை குவித்துள்ள பாராசைட் படமும் இதே பாணியில்தான் படமாக்கப்பட்டுள்ளது. தமிழில் ஒட்டுண்ணி என அழைக்கப்படும் இப்படத்தில் ஏழ்மை வர்க்கத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று போலி ஆவணங்களை தயாரித்து பணக்கார குடும்பம் ஒன்றில் ஒட்டுண்ணியாக சேர்ந்து ஏழ்மையில் இருந்து விடுபட நினைப்பதே படம்.

    விஜய் ஃபேன்ஸ்

    இதில் தென்கொரியா மற்றும் வடகொரியாவுக்கு இடையிலான சண்டை சச்சரவுகள் அதிபர் கிம்மின் அணு ஆயுதக் கொள்கை உள்ளிட்டவையும் கேலியாக சீண்டப்பட்டிருகிறது. படத்தின் முதல் பாதி முழுக்க முழுகக் விஜயின் மின்சார கண்ணா படம் தான் என்று ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் 4 ஆஸ்கர் விருதுகளை குவித்திருப்பதால் டிவிட்டரில் விஜய் ரசிகர்கள் மார்தட்டி வருகின்றனர்.

    டிவிஸ்டு இருக்கு

    அது அல்ரெடி இங்க எடுத்தாச்சே.. மின்சாரக் கண்ணா என கூறிருக்கிறார் இந்த நெட்டிசன். மின்சாரக்கண்ணா = பாராசைட் என தெரிவித்திருக்கிறார் இந்த ரசிகர். கொரியன் படமான பாராசைட் விஜயின் மின்சாரக் கண்ணா படத்தை அடிப்படையாக கொண்டது என தெரிவித்திருக்கிறார் இந்த ரசிகர். மின்சார கண்ணா படம் தான் பாராசைட். ஆனால் இதில் சில திருப்புமுனைகளும் டிவிஸ்ட்டுகளும் உள்ளது என்கிறார் இந்த ரசிகர்.

    அதைப்போலவே

    இன்று பாராசைட் திரைப்படத்திற்கு 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. ஆனால் படம் பார்த்த பிறகு மின்சாரா கண்ணா படத்திலிருந்து எடுக்கப்பட்ட கதையின் கதைக்களம் என எனக்குத் தெரிந்தது. மின்சாரா கண்ணாவில் அனைத்து குடும்பத்தினரும் காதல் உதவிக்காக பணியமர்த்தப்பட்டனர். மேலும் அதேதான் பாராசைட் படத்திலும் ஒரு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் பிழைப்புக்காக வேலைக்கு அமர்த்தப்பட்டனர் என தெரிவித்திருக்கிறார் இவர்.

    இன்ஸ்பையர்

    பாராசைட் படம் 6 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் படம் விஜயின் மின்சார கண்ணா படத்தால் இன்ஸ்பையராகி எடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார் இந்த ரசிகர். பாராசைட் படம் பார்க்க வேண்டிய படம், ஏன் இவ்வளவு மதிப்பு கொடுக்கப்படுகிறது என தெரியவில்லை. படம் பார்த்த சில நிமிடங்களிலேயே படம் மின்சார கண்ணாவின் கதைக்கருவை கொண்டிருப்பதாக உணர்ந்தேன் என்கிறார் இந்த ரசிகர்.

    English summary
    Vijay fans says that Parasite movie is inspired by Actor Vijay's Minsarakanna movie. Parasite movie got 4 Oscar awards today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X