சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் விஜய்யின் தவெக கொடி?.. ஆத்தாடி இது லிஸ்ட்லையே இல்லையே ப்பா!

சென்னை: சிவகார்த்திகேயனின் பராசக்தி ஜனவரி பத்தாம் தேதியும், விஜய்யின் ஜனநாயகன் ஜனவரி ஒன்பதாம் தேதியும் ரிலீஸாகவிருக்கின்றன. இவற்றில் பராசக்திக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டது. இப்போதுவரை ஜனநாயகனுக்கு அந்த சிக்கல் தீரவில்லை. எனவே பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறது. விரைவில் இந்த சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என்றும் நம்பப்படுகிறது.

விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்படும் ஜனநாயகன் ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. அதேபோல் ஜனவரி 14ஆம் தேதி வரும் என சொல்லப்பட்டிருந்த பராசக்தி நான்கு நாட்கள் முன்னதாகவே பத்தாம் தேதி ரிலீஸாகிறது. இதன் காரணமாக இந்தப் பொங்கல் விஜய் Vs சிவகார்த்திகேயன் போட்டி என பலர் கொளுத்தி போட்டார்கள்.ஆனால் இது போட்டி பொங்கல் இல்லை; அண்ணன், தம்பி பொங்கல்தான் என விளக்கிவிட்டார் எஸ்கே.

பராசக்தி சென்சார் சான்றிதழ்: பராசக்தி படத்தின் கதை ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்த மாணவர்கள் போராட்டத்தினை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே அதீத எதிர்பார்ப்பை படம் பெற்றிருக்கிறது. படத்துக்கு யு/ஏ சான்றிதழை சென்சார் அதிகாரிகள் வழங்கிவிட்டார்கள். அதுமட்டுமின்றி படத்தை பார்த்த அதிகாரிகள் படம் அருமையாக வந்திருப்பதாக பாராட்டினார்கள் எனவும் ஒரு தகவல் ஓடுவது குறிப்பிடத்தக்கது.

Vijay Fans Says TVK Flag Reference in Sivakarthikeyan Parasakthi Movie
Photo Credit:

ஜனநாயகனுக்கு சிக்கல்: ஆனால் விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நீடித்துவருகிறது. அப்படத்துக்கும் யு/ஏ சான்றிதழ் வழங்கிவிட்டதாக காலையில் தகவல்கள் வெளியான சூழலில்; தங்களுக்கு இன்னும் சென்சார் அதிகாரிகள் சர்ட்டிஃபிக்கேட் வழங்கவில்லை என பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. அவசர வழக்காக அதனை கோர்ட் விசாரிக்கவிருக்கிறது.

இரண்டு படத்தின் ட்ரெய்லர்கள்: இதற்கிடையே இரண்டு படங்களின் ட்ரெய்லர்களும் சில நாட்களுக்கு முன்பு வெளியாகின. இரண்டுக்குமே வரவேற்பு கிடைத்தாலும்; ஜனநாயகனைவிடவும் பராசக்தி ஒரு படி மேலே இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். யூடியூப் வியூஸ்களில்கூட பராசக்தி ட்ரெய்லர் ஜனநாயகன் ட்ரெய்லரை அசால்ட்டாக தாண்டி மேலே சென்றுவிட்டது. ஆனால் போட் வியூஸ் மூலம்தான் இந்த பார்வைகளை எல்லாம் அவர்கள் அள்ளியிருக்கிறார்கள் என்பது விஜய் ரசிகர்களின் குற்றச்சாட்டு மற்றும் விமர்சனமாக இருக்கிறது. ரிலீஸில்தான் பிரச்னை இருக்கும் என்று பார்த்தால் ட்ரெய்லர் வந்ததுமே இரண்டு தரப்பு ரசிகர்களும் சோஷியல் மீடியாக்களில் மோதிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

இது லிஸ்ட்லையே இல்லையே?: இந்நிலையில் பராசக்தி படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற ஷாட் ஒன்று சோஷியல் மீடியாக்களில் வைரலாகியிருக்கிறது. அதாவது அதில் ரயில் ஒன்றில் தீ பரவட்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது. அந்த ரயில் பெட்டி விஜய்யின் தவெக கொடி நிறத்திலேயே இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்களோ, 'பராசக்தி படத்தில் விஜய்யின் தவெக கொடியை பயன்படுத்தியிருக்கிறார்கள்.' என கூறுகிறார்கள். அதற்கு எஸ்கே ரசிகர்களோ, 'பராசக்தி கதை நடப்பது 60களில். விஜய் கட்சி ஆரம்பித்திருப்பது இப்போது. எனில் எப்படி விஜய்யின் கட்சி கொடியை பயன்படுத்தியிருப்பார்கள். இஷ்டத்துக்கு பேசக்கூடாது' என பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X