ஏதாவது சொல்றதுக்குள்ள ட்வீட்டை டெலிட் பண்ணுங்க.. பிகில் நடிகையை விளாசிய விஜய் ரசிகர் #RIPBala

சென்னை: பிகில் நடிகை வர்ஷா பொல்லம்மா போட்ட ட்வீட்டுக்கு கீழே அவரை விஜய் ரசிகர் ஒருவர் விளாசி உள்ளார்.

Recommended Video

டப்ஸ்மாஷில் கலக்கிய 'ஜூனியர் நஸ்ரியா' கையில் இப்போ மூணு படம்!- வீடியோ

மாஸ்டர் படத்தை பார்க்காமலே போகிறேன் என ட்வீட் போட்டு தளபதி விஜய் ரசிகர் பாலா தற்கொலை செய்து கொண்டது விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ரசிகர்களுடன் இணைந்து நடிகர் சாந்தனு உள்ளிட்ட பிரபலங்களும் பாலாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சோகத்தில் விஜய் ரசிகர்கள்

சோகத்தில் விஜய் ரசிகர்கள்

#RIPBala என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு தங்களது இரங்கலை விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ரசிகர் ஒருவர் இறந்த செய்தியை அறிந்து தல அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களுக்கு ஆதரவாகவும், தளபதி விஜய் அந்த ரசிகரின் குடும்பத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சாந்தனு அதிர்ச்சி

சாந்தனு அதிர்ச்சி

தளபதி விஜய் ரசிகர் பாலாவுக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து சரியாக தெரியவில்லை. ஆனால், எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும், அதற்கு தற்கொலை தீர்வாகாது நண்பர்களே.. உயிரிழந்த அவரின் ஆன்மா சாந்தியடையட்டும், அந்த ரசிகரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

பிகில் மோதிரம்

பிகில் மோதிரம்

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பிகில் திரைப்படம் வெளியானது. அதற்கு முன்னதாக படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், அந்த படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர் விஜய் பிகில் பெயர் பொறிக்கப்பட்ட தங்க மோதிரத்தை பரிசாக அளித்தார். தற்போது பிகில் மோதிரத்தை காட்டியபடி போட்டோ போட்டு ஒரு வருடம் ஆகுது நண்பர்களே என பதிவிட்டுள்ளார் வர்ஷா பொல்லம்மா.

விஜய் ரசிகர் விளாசல்

விஜய் ரசிகர் விளாசல்

எதாவது சொல்றதுக்குள்ள இந்த ட்வீட்டை டெலிட் பண்ணிடுங்க என விஜய் ரசிகர் ஒருவரை இழந்த துயரில் இருக்கும் ரசிகர் ஒருவர் வர்ஷா பொல்லாம்மாவின் ட்வீட்டுக்கு கீழே விளாசியுள்ளார். அவங்க என்ன பண்ணுவாங்க என இன்னொரு விஜய் ரசிகர் ஆதரவாக கமெண்ட் செய்ய.. தெரியாம இருந்தா தெரியட்டும் என மீண்டும் கொந்தளித்துள்ளார்.

கொண்டாட்ட மூட்ல இல்லை

கொண்டாட்ட மூட்ல இல்லை

செலிபிரேட் பண்ற மூட்ல விஜய் ரசிகர்கள் இல்லை மேடம்.. தளபதி ரசிகர்களில் ஒருவரை இழந்துட்டாங்க.. Stay Strong நண்பர் விஜய் ஃபேன்ஸ் என தல ரசிகர்கள் அந்த பிகில் நடிகைக்கு விளக்கி வருகின்றனர். விஜய் ரசிகர்களும் தங்களின் துயரத்தை வர்ஷா பொல்லம்மாவிடம் எடுத்து உரைத்து வருகின்றனர்.

சூப்பரான ரோல்

சூப்பரான ரோல்

96 படத்தில் விஜய்சேதுபதியின் மாணவியாக நடித்த நடிகை வர்ஷா பொல்லம்மா, பிகில் படத்தில் சிங்கப்பெண்களில் ஒருவராக நடித்து இருப்பார். கர்ப்பமாக இருந்தாலும், தனது அணிக்காக விளையாட வேண்டும் என்கிற வெறியை தனது நடிப்பில் காட்டி அசத்தி இருப்பார். திருமணத்திற்கு பிறகு கனவுகளை இழக்கும் பெண்களின் நிலைமையை அவரது கதாபாத்திரம் அழகாக விளக்கி இருக்கும்.

ட்வீட் நீக்கம்

ட்வீட் நீக்கம்

தளபதி விஜய் ரசிகர்களின் சோகத்தை உணர்ந்த நடிகை வர்ஷா பொல்லம்மா, தனது பிகில் மோதிர ட்வீட்டை உடனடியாக நீக்கி உள்ளார். வர்ஷா பொல்லம்மாவை விளாசிய அந்த ரசிகர் அவருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். பாலா உயிரிழந்த நிலையில், இந்த நாளை விஜய் ரசிகர்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X