குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்!
சென்னை: அனிருத் இசையில், அருண்ராஜா காமராஜ் வரிகளில் விஜய் பாடிய மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாட்டை ஹாலிவுட் நடிகர் பில் ட்யூக் பாராட்டி உள்ளார்.
Recommended Video
அவரது ட்வீட்டை பார்த்து, உற்சாகமடைந்த மாஸ்டர் படத்தின் இயக்குநர் அவருக்கு நன்றி என கமெண்ட் செய்துள்ளார்.
இந்நிலையில், யாருடா அந்த ஹாலிவுட் பிரபலம் என தளபதி ரசிகர்களும், விஜய் ஹேட்டர்களும், சமூக வலைதளத்தில் தேடி வருகின்றனர்.

வசீகர குரல்
கொலவெறி பாடல் ஸ்டைலில் அனிருத் இசையமைத்துள்ள குட்டி ஸ்டோரி பாடல் உலகளவில் வைரலாகி வருகிறது. இந்த பாடலில் நடிகர் விஜய்யின் குரல் மிகவும் இளைமையாக இருப்பதும், லிரிக் வீடியோ அனிமேஷன் ஒர்க்கும், நோ டென்ஷன் பேபி என சொல்லும் பாசிட்டிவ் வரிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
சூப்பரா இருக்கு
மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான குட்டி ஸ்டோரி பாடலை கேட்ட பிரபல ஹாலிவுட் நடிகர் பில் ட்யூக், தனது ட்விட்டர் பக்கத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அனிருத், அருண்ராஜா காமராஜ், சோனி மியூசிக் மற்றும் IARA விருதுகளை டேக் செய்து சூப்ப்ரா இருக்கு என பாராட்டி உள்ளார்.

யார் இந்த பில் ட்யூக்?
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிப்பில் வெளியான பிரடேட்டர், கமாண்டோ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் பில் ட்யூக். சமீபத்தில் வெளியான நிக்கோலஸ் கேஜின் பனோஸ் காஸ்மடோஸ் மாண்டி படத்திலும் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகரான இவர், தயாரிப்பாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் திகழ்கிறார்.

மெர்சல் மேஜிக்
அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் IARA எனும் சர்வதேச விருதினை வென்றது. அந்த விருதினை நடிகர் விஜய் வென்ற பின்னர், விஜய் மீது சர்வதேச நடிகர்களின் பார்வை பட்டது. மெர்சலை தொடர்ந்து, விஜய்யின் ரசிகராகவும், விஜய் நடிக்கும் புதிய படங்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பில் ட்யூக் தெரிவித்து வருகிறார்.
தளபதி ரசிகர்
ஹாலிவுட் நடிகர் பில் ட்யூக், மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடலை புகழ்ந்துள்ள நிலையில், "மனுஷன் தளபதி ரசிகர் போல.. Thank you sir on behalf of all thalapathy fans" என விஜய் ரசிகர்கள் பில் ட்யூக்குக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
எப்போ நடிக்கப் போறீங்க
மேலும், மற்றொரு தளபதி ரசிகர், "ஹே ட்யூக், தளபதி விஜய்யுடன், எப்போ சேர்ந்து நடிக்கப் போறீங்க, என கேட்க, அவரும், அதற்காக ஒர்க் பண்ணிக் கிட்டு, இருக்கேன், சீக்கிரமே நடக்கும் என்கிற ரீதியில் பதில் அளித்துள்ளார். சீக்கிரமே உங்களை கோலிவுட்டில் விஜய் படத்தில் பார்க்க ஆசை என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications