வதந்திக்கு விளக்கம் கொடுத்தா.. விஜய் சொன்ன மேட்டர்.. டிரெண்டாக்கும் தளபதி ரசிகர்கள்.. ஏன் தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஒரே அபார்ட்மெண்டில் வீடு வாங்கி தங்கி வருவதாக வலைப்பேச்சு யூடியூப் சேனலில் பேசியது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. நடிகர் விஜய் மற்றும் திரிஷா லியோ படத்தில் ஒன்றாக இணைந்து நடித்ததில் இருந்தே ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பி வருகின்றன.

அதுவும் அந்த லிப் லாக் காட்சி பெரும் பரபரப்பை பற்ற வைத்தது. நடிகர் விஜய் சங்கீதாவை பிரிந்து விட்டார் என்றும் அதனால் தான் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சங்கீதா வருவதில்லை என்றும் கூறுகின்றனர்.

vijay trisha

விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாமல் அடுத்த நாள் திரிஷா வெளியிட்ட புகைப்படத்தை வைத்து ஏகப்பட்ட மீம்கள் சோஷியல் மீடியாவில் விவாதப் பொருளாக மாறி வரும் நிலையில், தளபதி ரசிகர்கள் நம்பிக்கையுடன் அவை அனைத்தையும் உண்மை இல்லை என ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விஜய் பேசிய த்ரோபேக் வீடியோ ஒன்றையும் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

ஒரே குடியிருப்பில் விஜய், திரிஷா?: பட்டினப்பாக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா இருவரும் பிரம்மாண்ட குடியிருப்பில் பக்கத்து பக்கத்து ஃபிளாட் வாங்கி குடியேறியிருப்பதாக வலைப்பேச்சு பிஸ்மி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த லிப்டில் தான் விஜய்யை போட்டோ எடுத்து திரிஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.

vijay trisha

விஜய்யின் த்ரோபேக் பேச்சு: உண்மைக்கு விளக்கம் கொடுக்கலாம். ஆனால், வதந்திக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகிவிடும் என விஜய் பேசிய த்ரோபேக் பேச்சை தளபதி ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தற்போது அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். தேவையில்லாமல் விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை தடுக்கவே இப்படி வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்றும் தளபதி மீது தங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும் விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

vijay trisha

என் தலைவன் தங்கம் தான்: நடிகர் விஜய்யின் ரசிகர்கள் விஜய் மற்றும் திரிஷா பற்றி சினிமா வட்டாரத்தில் சிலர் பேசும் விஷயங்கள் அனைத்துமே வதந்தி என்றும் அதற்கான விளக்கத்தை தளபதி தர தேவையில்லை. அவர் என்னைக்குமே தங்கம் தான் அவரை பற்றி எங்களுக்குத் தெரியும் என விஜய் பேசிய அந்த த்ரோபேக் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். மேலும், சங்கீதா பற்றி விஜய் வெட்கப்பட்டு பேசிய வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: vijay trisha விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X