அஜித்துக்கு புடிச்சதை செய்தால் உங்களுக்கு எங்க வலிக்குது? வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் விஜய் ரசிகர்கள்
துபாய்: நடிகர் அஜித் குமார் என்று சொல்வதா இல்லை கார் ரேஸர் அஜித்குமார் என்று சொல்வதா என எதை முதன்மைப் படுத்துவது என்று யோசிக்கும் அளவுக்கு அஜித் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். அஜித் ரேஸ்க்குச் சென்று கோப்பைகளை வென்று கொண்டு இருக்கிறார் என்று ஒருபுறம் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி இருந்தாலும், தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியான சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்று வருகிறது.
அதாவது சில நாட்களுக்கு முன்னர் அஜித் நடித்த கேம்பா கோலா விளம்பரம் வெளியாகியது. இதற்கு ஒரு புறம் வரவேற்பு இருந்தாலும், மறுபுறம் அதிருப்தி நிலவி வருகிறது. அதாவது, அஜித் ஒரு கட்டத்திற்கு மேல் எந்த விளம்பரத்திலும் நடிக்க கூடாது என்ற முடிவை தீர்க்கமாக எடுத்து பல ஆண்டுகள் பின்பற்றி வந்தார். அவரை எப்படியாவது தங்களது பிராண்டின், பிராண்ட் அம்பாசிடராக மாற்றிவிடலாம் என்று பல முன்னணி நிறுவனங்கள் முயற்சி செய்தது. ஆனால் அவர் எல்லாவற்றிற்கும் 'நோ' சொல்லிவிட்டார். பணம் வேண்டும் என்று அஜித் நினைத்திருந்தால் அதை எப்போதோ செய்திருக்கலாம். ஆனால் அஜித் அப்போது பணத்தை பெரும் பொருட்டாகவே கருதவில்லை.
ஆனால் தற்போது இந்தியாவில் கார் ரேஸை பெரும்பாலான மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதைக் காட்டிலும், அதில் அவர்களை ஈடுபடச் செய்யவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒரு பகுதிதான் கேம்பா கோலா விளம்பரத்தில் நடித்தது. தற்போது அஜித்துடன் ரேஸ் காரில் ஒரு ரவுண்ட் செல்ல இந்திய மதிப்பில் ரூபாய் 90 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கும் திட்டத்தை அஜித் குமார் ரேஸிங் அறிவித்துள்ளது.

விஜய் ரசிகர்கள் அதரவு: இதை ஒரு சிலர் ட்ரோல் செய்தாலும் கார் ரேஸ் மீது இந்திய இளைஞர்களுக்கு ஆர்வம் ஏற்பட அவர் எடுக்கும் முயற்சிகளில் ஒன்றாகத்தான் பலரும் பார்த்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அஜித்தை பாராட்டி வருகிறார்கள். அதிலும் விஜய் ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், " 90,000 கொடுங்க, தல அஜித் கூட காரில் ஒரு ரவுண்டு வாங்க. என்ன தான் எதிர் கூடாரமா இருந்தாலும்.. பெரிய மரியாதை இருந்துச்சு இவர் மேல. படத்தை விட்டுட்டு ரேஸ்க்கு போறேன்னு.. ஏதோ.. குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கிற ஆள் மாதிரி இதெல்லாம் பண்ணிட்டு இருக்காரு. விஜய் ஓட காம்படேட்டர்யா. The Unofficial No. 2" என ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
அஜித்துக்கு பிடிச்சது: அதேபோல் மற்றொரு ரசிகரோ, " ஸ்பான்சர்ஷிப்பிற்காக ஒவ்வொரு கதவையும் தட்டுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இதுதான் தொழிலுக்கும் ஆர்வத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு. அவர் ஒவ்வொரு இந்திய பிரபலத்தையும் தனது கார் ரேஸ் பந்தையத்தை பார்க்க அழைத்து வருகிறார், இதனால் அது இந்தியாவில் பெரும்பாலான ரசிகர்களைச் சென்றடைகிறது, மேலும் அவர் அதிலிருந்து சில ஸ்பான்சர்ஷிப்பைப் பெற முடியும். ஆனால் சிலர் இதை உணராமல், கேம்பா-வை விளம்பர படுத்தியதற்காக அவரை ட்ரோல் செய்து அவமதிக்கிறார்கள். அதே நேரத்தில் அரசாங்கம் மதுபானத்தை ஊக்குவிக்கும் போது அதே மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் அவருக்குப் புடிச்சத செய்ய விடுங்க டா" என்று பதிவிட்டுள்ளார். விஜய் ரசிகர்களின் இந்த ஆதரவுக் குரல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











