விஜய் த்ரிஷாவுடன் வந்தால் உங்களுக்கு என்ன? தளபதிக்காக நாங்க இருக்கோம்.. ரசிகர்கள் பளிச்

சென்னை: நடிகர் விஜய் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து கொண்டு திருமணத்திற்குச் சென்றது தொடர்பான பேச்சுக்கள் தான் தற்போது தமிழ்நாடு அரசியல் சூழல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாக உள்ளது. இப்படி இருக்கையில் விஜய்க்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்தாலும் விஜய்க்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதாவது விஜய்யின் மனைவி சங்கீதா குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்துள்ளார். இப்படி இருக்கையில் தனது விவாகரத்து மனுவில், விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் உள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இப்படி இருக்கும்போது நடிகர் விஜய் தனது விவாகரத்து வழக்கின் முதல் அமர்வுக்காக இன்னும் நீதிமன்றத்திற்கே செல்லாத நிலையில் நடிகை த்ரிஷாவுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. விஜய்க்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்த பலரும் தற்போது விஜய்க்கு எதிராக பதிவிட தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக இதுக்கு எல்லாம் என்ன சொல்லி முட்டுக் கொடுப்பது என்று தெரியவில்லை. தேர்தல் முடிந்த பின்னர் சமூக வலைதளப் பக்கத்திற்கு வருகிறோம். இது எல்லாம் ஒரு தலைவனுக்கு அழகா? உங்ககிட்ட நாட்டைக் கொடுத்தால் நாடு விளங்கிடும் என்று எல்லாம் பதிவிட்டு வருகிறார்கள்.

Vijay Fans Shows The Support Of Vijay About Trisha Controversy

ரசிகர்கள் ஆதரவு: இது ஒரு புறம் இருக்க விஜய் ரசிகர்கள், பலரும் விஜய்க்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதாவது, விஜய் யாருடன் எங்கு சென்றால் உங்களுக்கு என்ன? அவர்கள் இருவரும் இது தொடர்பாக வாய் திறக்கும் வரை இது குறித்து பேச யாருக்கும் எந்த தகுதியும் இல்லை. விஜய் அண்ணா நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம் தான் என்று பதிவிட்டு வருகிறார்கள். சிலர் பேசி வீடியோவாக எல்லாம் பதிவிடுகிறார்கள்.

அழகா இருக்காங்க: மேலும் சிலரோ, விஜய் அண்ணாவையும் த்ரிஷாவையும் பார்க்க செம்ம அழகாக இருக்கிறது. இதுதான் சரியான ஜோடி, பெர்ஃபெக்ட் மேட்ச் இதுதான் என்று எல்லாம் ஹார்ட்டின்களை பறக்கிவிட்டு வருகிறார்கள். ஒரு சிலரோ இருவரும் கடைசியாக இணைந்து நடித்த படமான தி கோட் படத்தை தயாரித்த நிறுவனம், ஏஜிஎஸ். அவர்களின் இல்லத் திருமணத்தில் ஒரு டீமாக இருவரும் இணைந்து சென்றுள்ளார்கள். இதற்கு ஏன் தேவையில்லாமல் அவர்களை குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று எல்லாம் பதிவிட்டு வருகிறார்கள். பலர் சமூகவலைதளத்தில் வாக்குவாதம் செய்தும் வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X