Don't Miss!
- Automobiles
இன்சூரன்ஸை கிளைம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகும் கியா ஹூண்டாய் கார் உரிமையாளர்கள்... இதற்கான காரணம் என்ன?
- News
பாஜகவுக்கு ‘ஐடியா’வே இல்ல.. ஓபிஎஸ் இழுத்து விடுறார்.. மூல காரணமே அவர் தானாம்.. மாஜி சொல்லும் சேதி!
- Lifestyle
Today Rasi Palan 31 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்...
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
நியூசிலாந்தில் எதிரொலித்த விஜய்யின் வாரிசு.. இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் போட்டியில் சம்பவம்!
சென்னை: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது வாரிசு பதாகையை ரசிகர் ஒருவர் கேமராவுக்கு முன்பாக காட்டிய போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி உள்ளன.
சத்யம் தியேட்டரில் படு மாஸாக விஜய்யின் பிரம்மாண்ட கட் அவுட் நிறுவப்பட்டுள்ள நிலையில், சென்னையின் பல முன்னணி தியேட்டர்களை வாரிசு டீம் தட்டித் தூக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜித்தின் துணிவு படத்துடன் மோத முழு வீச்சில் ரெடியாகி வருகிறது விஜய்யின் வாரிசு பட டீம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய்யின்
வாரிசு
படம்
தெலுங்கிலும்
ரிலீஸ்
செய்வதில்
பிளஸ்
பாயிண்ட்
இருக்கு..
ப்ரியாமணி
சுவாரஸ்யம்!

ஆடியோ லாஞ்ச்
இந்த டிசம்பர் மாதம் விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 24ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு படம் கடைசி நேரத்தில் சந்தித்த ஏகப்பட்ட சிக்கல்கள் குறித்தும் படம் எப்படி வந்திருக்கு என்பது குறித்தும் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்ட கட் அவுட்
தெறி ஸ்டைலில் ஜீப்பில் விஜய் சாய்ந்து அமர்ந்து கொண்டு கொடுத்துள்ள போஸை பார்த்ததுமே விஜய் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே சென்று விட்டனர். சென்னையின் முன்னணி தியேட்டரான சத்யம் திரையரங்கில் பிரம்மாண்ட வாரிசு கட் அவுட் நிறுவப்பட்டுள்ளது. கேரளாவிலும் வழக்கம் போல தியேட்டர்களுக்கு முன்னால் விஜய் ரசிகர்கள் கட் அவுட்களை வைக்க ஆரம்பித்துள்ளனர்.

நியூசிலாந்தில் வாரிசு
தமிழ்நாடு, கேரளா மட்டுமின்றி ஓவர்சீஸ் ரைட்ஸை போல ஆல் ஏரியாவிலும் வாரிசு படம் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், நியூசிலாந்தில் வாரிசு படத்தின் பதாகையை தமிழ் ரசிகர் ஒருவர் ஏந்தி நிற்கும் போட்டோக்கள் இணையத்தில் தீயாக பரவி விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளன.

இந்தியா - இங்கிலாந்து போட்டி
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் இன்று நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டியின் போது தான் இந்த சம்பவத்தை அந்த ரசிகர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வலிமை பட வெளியீட்டுக்கு முன்பாக அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களிடம் வலிமை அப்டேட்டை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.