பீஸ்ட் செகண்ட் சிங்கிளை காப்பி என விமர்சித்த பிக் பாஸ் பிரபலம்.. பிரித்து மேயும் விஜய் ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்ட அபிஷேக் ராஜா பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள் 'ஜாலியோ ஜிம்கானா' புரமோ வீடியோ வெளியானவுடன் அந்த பாடல் காப்பி என்பது போல போட்ட ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னணி நடிகர்களின் படங்கள் மற்றும் பாடல்கள் வெளியானாலே தொடர்ந்து இந்த காப்பி கேட் பிரச்சனை வந்து விடுகிறது.
சமீபத்தில் அஜித்தின் வலிமை படத்தின் கிளைமேக்ஸ் காட்சி அப்படியே ஜாக்கி சான் படத்தின் காப்பி என கலாய்க்கப்பட்டது.

அரபிக் குத்தை முந்தியது
சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் இசையமைத்த அரபிக் குத்து பாடலின் காமெடி புரமோவை பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிளான 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் புரமோ ஒரே நாளில் முந்தியது. விஜய் வாய்ஸ்னா சும்மாவா என ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அதே சமயம் அந்த பாடல் ட்யூன் காப்பி அடிக்கப்பட்டதாகவும் ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.

7அப் விளம்பரம்
ராக்ஸ்டார் அனிருத் 7அப் விளம்பரத்திற்கு போட்ட ட்யூனை பீஸ்ட் படத்திற்கு போட்டு விட்டாரா என்றும் மேலும், வில்லு படத்தில் வரும் வாடா மாப்பிள்ளை ட்யூன் போலவே இருக்கு என்றும் ஏகப்பட்ட ட்ரோல்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. இந்நிலையில், பிக் பாஸ் பிரபலம் அபிஷேக் ராஜா போட்ட கமெண்ட் விஜய் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ளது.

பிக் பாஸ் பிரபலம் ட்ரோல்
யூடியூப் விமர்சகரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டவருமான அபிஷேக் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் "பீலா பீலா" என ட்வீட் போட விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்திற்காக அனிருத் இசையமைத்த "பீலா பீலா" பாடல் போல இருப்பதாக அவர் கமெண்ட் செய்துள்ளார் என விஜய் ரசிகர்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர்.

விளாசும் ரசிகர்கள்
சமூக வலைதளங்களில் இப்படி பிரபலங்கள் மற்றும் விமர்சகர்கள் நெகட்டிவிட்டியை பரப்பினால் உடனடியாக அந்த நடிகரின் ரசிகர்கள் வரிசையாக வந்து கமெண்ட் பக்கத்தில் அடி வெளுத்து வருகின்றனர். ப்ளூ சட்டை மாறனை அஜித் ரசிகர்கள் விளாசி வரும் நிலையில், பிக் பாஸ் பிரபலம் அபிஷேக் ராஜாவை விஜய் ரசிகர்கள் பிரித்து மேய்ந்து வருகின்றனர்.

அரபிக் குத்துக்கு ஆட்டம்
மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உலகமே ஜாலியோ ஜிம்கானாவை கொண்டாடி வரும் நிலையில், நான் ஹலமதி ஹபிபோ பாடலுக்கு நடனமாடி உள்ளேன் என அரபிக் குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்ட வீடியோவை ஷேர் செய்துள்ளார். மேலும், சாரி தளபதி என்றும் குறிப்பிட்டு, தனது ஆட்டத்தை விஜய் ரசிகர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பதிவிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











