Vijay - அஜித்துக்கு சப்போர்ட் செய்த ரஜினி பட இயக்குநர்.. கொந்தளிப்பில் விஜய் ரசிகர்கள்?.. என்ன ஆகப்போகுதோ?
சென்னை: Ajith And Vijay (அஜித் மற்றும் விஜய்) பாட்ஷா பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அஜித் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.
ரஜினிகாந்த் மொத்தம் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்,மெகா ஹிட் லிஸ்ட்டில் இருப்பவை. அப்படி அந்த லிஸ்ட்டில் மெகா ப்ளாக் பஸ்டர் கேட்டகிரியில் இருக்கும் படம்தான் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான பாட்ஷா திரைப்படம்.

மெகா ஹிட் பாட்ஷா: மும்பையில் தாதாவாக இருக்கும் பாட்ஷா சூழ்நிலைகளால் தமிழ்நாட்டில் ஆட்டோ ஓட்டும் மாணிக்கமாக அடங்கி வாழ்வது என்ற ஒன்லைனை வைத்துக்கொண்டு சுரேஷ் கிருஷ்ணா மேக்கிங்கில் அதகளம் செய்திருப்பார். பாலகுமாரனின் வசனங்கள், தேவாவின் இசை, அதிரடி ஆக்ஷன் காட்சிகள் என முழுக்க முழுக்க கமர்ஷியல் பேக்கேஜாக உருவான படம் பாட்ஷா.
ரஜினி, ரகுவரன்: படத்தின் இரண்டு தூண்களாக இருந்தவர்கள் ரஜினிகாந்த்தும், ரகுவரனும்தான். ரஜினிகாந்த் தனது அதிரிபுதிரி ஸ்டைலால் அதிரடி காட்ட; ரகுவரனோ தனது வித்தியாசமான வில்லத்தனத்தால் பரபரப்பை கூட்ட என இரண்டு பேரும் போட்டிப்போட்டு நடித்திருப்பார்கள். அதிலும் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும் காட்சி இன்றுவரை அணையாத பட்டாசு ரகம் என்றுதான் சொல்ல வேண்டும்.
பாட்ஷா 2 நோ: அந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு கிரேஸால் பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அதற்கு ரஜினிகாந்த் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டார். பாட்ஷா என்றால் அது ஒன்றுதான் என்றும் சொல்லிவிட்டார்.மேலும் அப்படியே படம் எடுத்தாலும் பாட்ஷாவாக நடிக்க நான் இருக்கிறேன் மார்க் ஆண்டனியாக நடிக்க யார் இருக்கிறார் என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
பாட்ஷா ரீமேக்: சரி பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டாம் அதனை ரீமேக் செய்தால் என்ன என்ற பேச்சுக்களும் எழுந்தன. அதுதொடர்பாக சுரேஷ் கிருஷ்ணாவிடமும் ஒருமுறை கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பாட்ஷா படத்தை ரீமேக் செய்தால் விஜய்யைவிட அஜித்தான் பொருத்தமாக இருப்பார் என்று ஓபனாகவே கூறிவிட்டார்.
விஜய் ரசிகர்கள் அப்செட்: சுரேஷ் கிருஷ்ணாவின் பதிலை பார்த்து விஜய் ரசிகர்கள் அப்செட் ஆகவே செய்தனர். மேலும் அடுத்த ரஜினிகாந்த் விஜய்தான் என்று அவர்கள் கூறிவரும் சூழலில் பாட்ஷா இயக்குநர் இப்படி சொல்லிவிட்டாரே என்றும் ஃபீல் செய்து; பாட்ஷா படத்தில் அஜித்தைவிட விஜய்தான் செட் ஆவார். ஏனெனில் அந்தப் படத்தில் வெறும் டான் மட்டும் இல்லை ஒரு அப்பாவியான சாமானியனாகவும் ரஜினி நடித்திருப்பார். அந்த அப்பாவியான சாமானியத்தன நடிப்பு அஜித்தைவிட விஜய்க்குதான் செட் ஆகும் என்றும் சுரேஷ் கிருஷ்ணாவின் வீடியோவை பகிர்ந்து கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்


Click it and Unblock the Notifications











