அந்த சீனைக் கூட ஒழுங்கா எடுக்கல.. பீஸ்ட் பட நடிகரே இப்படி சொல்லலாமா? விளாசும் ரசிகர்கள்!
சென்னை: பீஸ்ட் படத்தைத் தான் இன்னமும் பார்க்கவில்லை என்றும் ஆனால், படம் குறித்து வெளியான ட்ரோல்களை பார்த்தேன் என மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ பேசியிருப்பது விஜய் ரசிகர்களை பயங்கர கடுப்பில் ஆழ்த்தி உள்ளது.
ஏற்கனவே வட இந்தியாவை சேர்ந்த விமான ஒட்டி எழுப்பிய கேள்விக்கு பேன் இந்தியா அளவுக்கு ட்ரோல்கள் பறந்தன.
இந்நிலையில், படத்தில் நடித்த நடிகரே இப்படி விட்டுக் கொடுத்து பேசலாமா என்றும் படம் வெளியாகும் முன் ஒரு மாதிரியும், வெளியான பின்னர் ஒரு மாதிரியும் பேசுவது நல்லாவா இருக்கு என விஜய் ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

மிகப்பெரிய ஹைப்
டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் நெல்சன் விஜய்யை வைத்து இயக்கும் படத்திற்கு மிகப்பெரிய ஹைப் உருவானது. பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கிறார். செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ என பலர் உள்ளனர் என ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். கடைசியாக பீஸ்ட் டீசரில் ஃபைட்டர் ஜெட் ஓட்டும் காட்சிகள் எல்லாம் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட பீஸ்ட்
படம் வெளியாகும் முன்னதாக பண்ணப்பட்ட பில்டப் எல்லாம் படம் வெளியான பிறகு அப்படியே ட்ரோல்களாக மாறின. விஜய ராகவனாக நடிகர் விஜய் ஆக்ஷனில் அதகளம் செய்திருந்தாலும், திரைக்கதை சொதப்பிய நிலையில், பீஸ்ட் பெரியளவில் ட்ரோல் செய்யப்பட்டது. மலையாள நடிகர் டாம் ஷைன் சாக்கோவிற்கும் பெரிய ரோல் இல்லாதது மலையாள ரசிகர்களை அப்செட் ஆக்கியது.

ஷைன் டாம் சாக்கோ பேட்டி
சமீபத்தில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. பீஸ்ட் படத்தையே தான் இன்னமும் பார்க்கவில்லை என அவர் கூறியதும், படத்தின் ட்ரோல்களை மட்டுமே பார்த்துள்ளதாகவும் அவர் பேசியது விஜய் ரசிகர்களை மிகவும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.
Recommended Video

சரியாவே எடுக்கல
அந்த பேட்டியில் பேசிய ஷைன் டாம் சாக்கோ, ஒரு வெயிட்டான பொருளை தூக்கிக் கொண்டு சென்றால், முகத்தில் அதற்கான ரியாக்ஷனை காட்ட வேண்டும். ஆனால், பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் தன்னை தூக்கி வரும் போது எந்தவொரு ரியாக்ஷனையும் முகத்தில் வெளிக்காட்டி இருக்க மாட்டார். ஆனால், அது அவரது தவறு இல்லை. படக்குழுவினரின் தவறு தான் என டாம் ஷைன் சாக்கோவே பீஸ்ட் படம் குறித்த விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

விளாசும் ரசிகர்கள்
இயக்குநர் நெல்சனுக்கு இதன் மூலம் எந்தவொரு பாதிப்பும் இல்லை. அடுத்ததாக அவர் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்குகிறார். நடிகர் விஜய் வம்சி, லோகேஷ் கனகராஜ் என பிசியாகி உள்ளார். ஆனால், இதற்கு மேல் உனக்கு தமிழில் நடிக்க சான்ஸே கிடைக்காது என கெட்ட வார்த்தைகளால் அவரை திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











