விஜய்க்கு பண கொழுப்பா?.. சீமானை விட்டு விளாசும் தளபதி ரசிகர்கள்.. பெரியாரை தொடர்ந்து ஜன நாயகனா?

சென்னை: பெரியார் பற்றி சீமான் தொடர்ந்து பேசி வருவது ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பி வரும் நிலையில், அடுத்ததாக விஜய் பக்கம் தாவியிருக்கிறார் என சோஷியல் மீடியாவில் அவர் குறித்து ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிய ஆரம்பித்துள்ளன. சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய் ஜன நாயகன் படத்தை முடித்துவிட்டு 2026ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார்.

விஜய் தனக்கு அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை நியமித்து இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுதொடர்பான கேள்வியை பத்திரிகையாளர்கள் இன்று சீமானிடம் முன் வைத்தனர். அதுகுறித்து பேசும் போது பண கொழுப்பு என சீமான் பேசியது தான் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Vijay Seeman TVK

தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலரும் சீமான் திரள்நிதி எடுக்கும் போது கொழுப்பு வரவில்லையா என விளாசி வருகின்றனர்.

விஜய்யை எதிர்க்கும் சீமான்: ஆரம்பத்தில் தம்பி விஜய் அரசியலுக்கு வரட்டுமே என பெருந்தன்மையாக பேசி வந்த சீமான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்குப் பிறகு தனக்குப் போட்டியாக விஜய் வந்துவிட்டாரே என்கிற பொறாமையில் தொடர்ந்து அவரை எதிர்த்து கருத்துக்களை முன் வைத்து வருவதாக விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பண கொழுப்பு: தமிழ்நாட்டு அரசியல் பிரசாந்த் கிஷோருக்கு என்ன தெரியும் என்றும் தமிழ்நாட்டில் எத்தனை ஏரி, குளங்கள் உள்ளன, சாதிய பிரச்சனைகள் என்ன, மக்களுக்கு என்ன தேவை என்று ஏதாவது தெரியுமா? அவரை எல்லாம் எதற்கு கூப்பிடணும். அதாவது சிலருக்கு பண கொழுப்பு இருந்தால் இதுபோன்ற விஷயத்தை எல்லாம் தாராளமாக செய்வார்கள் என சீமான் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிச்சையெடுத்த கொழுப்பு: "நாலு பேர்ட்ட பிச்சை எடுத்து கொழுப்பெடுத்து திரியிற ஆளெல்லாம் உழைத்து சம்பாதித்தவர் பத்தி பேசலாமா??" என சமூக வலைதளங்களில் தளபதி ரசிகர்கள் சீமானுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட ஆரம்பித்துள்ளனர். நடிகராக இருந்து அரசியல்வாதியாக விஜய் மாறிய நிலையில் இருந்து அனைத்துக் கட்சிகளிடம் இருந்தும் அவருக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனால், தவெக தலைவராக எதற்கும் அஞ்சாமல் விஜய் தொடர்ந்து மற்ற கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரபலங்களை தனது கட்சிக்கு கொண்டு வரும் முயற்சியிலும் தனது வாக்கு சதவீதத்தை 2026ம் ஆண்டு தேர்தலுக்குள் அதிகரிக்கும் வேலையையும் பார்த்து வருகிறார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X