உலகத்திலேயே 4:30 நடக்குற நிகழ்ச்சிய 6:30க்கு லைவ்ல போடுற ஒரே சேனல் சன் டிவிதான்.. காண்டான ஃபேன்ஸ்!
சென்னை: மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை தாமதமாக லைவ் செய்யும் சன்டிவியை விஜய் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சி சன்டிவியில் மாலை 6.30 மணிக்கு நேரலை செய்யப்படும் என கடந்த ஒரு வாரமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாஸ்டர் ஆடியோ லாஞ்ச் மாலை 4.30 மணிக்கே தொடங்கி விட்டது.

ஒரே சேனல்..
நிகழ்ச்சி 4.30 மணிக்கு தொடங்கிய நிலையில் 6.30 மணிக்கு எதை லைவ் செய்யப்போகிறார்கள் என டென்ஷன் ஆகி விட்டார்கள் விஜய் ரசிகர்கள். இதனால் சன் டிவியை வாய்க்கு வந்தப் படி திட்டி தீர்த்துவிட்டார்கள் ரசிகர்கள். அடேய் சன் டிவி.. இந்த உலகத்திலேயே 4:30 நடக்குற நிகழ்ச்சிய 6:30க்கு லைவ்ல போடுற ஒரே சேனல் சன் டிவி தான் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

லைவ்வுன்னா என்ன?
மாஸ்டர் இசை வெளியீட்டு விழா ஏற்கனவே தொடங்கிவிட்டது. அப்போ 6.30 மணிக்கு சன் டிவி எப்படி லைவ் பண்ணுவாங்க என்று கேட்கிறார் இந்த ரசிகர். லைவ்வுன்னா என்னான்னு தெரியாமலே சேனல் நடத்துறான் இந்த சன் டிவிகாரன் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

என்னத்த பண்ணுவான்
டேய் சன் டிவி.. இதுக்கு பேரு தான் லைவ்வாடா என கேட்கிறார் இந்த ரசிகர். சன் டிவி லைவ் எங்கடா பக்கி என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். 6 மணிக்கு லைவ்வுன்னு தானே சொன்னான்... ஆனா இங்க ஆடியோ லாஞ்ச் ஸ்டார்ட் ஆகிடுச்சே... அப்போ 6.30 மணிக்கு லைவ்வா என்னத்த டெலிகாஸ்ட் பண்ணுவான் என்று கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

சன் டிவி அன்ட் கோதான்
இந்த உலகத்துலேயே 4:30 மணிக்கு நடக்குற ஆடியோ லாஞ்ச 6:30 மணிக்கு லைவ்வுன்னு போடுற மொத நெட்வொர்க் நம்ம
சன் டிவி & கோ தான் என்று கலாய்க்கிறார் இந்த ரசிகர்.
சன் டிவி : என்னடா என்கிட்ட 6:30 க்கு சொல்லிட்டு 4:30 கே ஆரம்பிச்சுட்டிங்க?
எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் : ஆன் நீ மட்டும் நாங்க நாளைக்கு அப்டேட்னு சொன்னப்ப முன்னாடியே ப்ரோமோ போட்டல. என்று காமெடியாக கலாய்க்கிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











