கண்ணுக்கூட தெரியலையா?.. விஜய் ரசிகர்களிடம் வசமா சிக்கிய அந்தணன்.. அடிச்சு நொறுக்குறாங்களே!

சென்னை: மூத்த பத்திரிகையாளரான அந்தணன் நடிகர் விஜய்க்கு கேரள ரசிகர்கள் லிப் கிஸ் அடிச்சாங்க என பேசிய வீடியோவுக்கு விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அந்தணனை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

கேரளாவில் நடிகர் விஜய் 'கோட்' படத்தின் ஷூட்டிங்கிற்காக சில நாட்களுக்கு முன்னதாக சென்றிருந்தார். அங்கே 5 நாட்கள் விஜய் படப்பிடிப்பு நடத்திய ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் நடிகர் விஜய்யை அந்தளவுக்கு நேசித்து அவரை சந்திக்க மணிக்கணக்கில் காத்துக்கிடந்தனர்.

Vijay fans slams Valaipechu Anthanan for his latest video for this reason

நடிகர் விஜய்யும் ஷூட்டிங் முடிந்தவுடன் தினமும் ரசிகர்களை வந்து சந்தித்து சென்றார். அவர்களுடன் உரையாடினார். செல்ஃபி வீடியோவை எல்லாம் எடுத்துக் கொண்டார்.

கேரளாவில் ரசிகர்கள் அதிகம்: தமிழ்நாட்டில் எந்தளவுக்கு விஜய்க்கு ரசிகர்கள் இருக்கின்றனரோ அதே அளவுக்கு கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து விஜய் திருவனந்தபுரம் புறப்பட்ட போதும், திரும்பி வந்தபோதும் கூட இங்கே கூட்டம் கூடவில்லை. ஆனால், நடிகர் விஜய் திருவனந்தபுரம் விமான நிலையம் வருகிறார் என்பதை அறிந்துக் கொண்ட ரசிகர்கள் விமான நிலையத்திலேயே விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நடிகர் விஜய்யின் காரை சேதப்படுத்தும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர்கள் கேரளாவில் இருப்பதை பார்த்து இங்கே உள்ள ரசிகர்களே ஷாக் ஆகி விட்டனர்.

விஜய்க்கு லிப் கிஸ்ஸா?: குஷி படத்தில் ஜோதிகாவுக்கும், நண்பன் படத்தில் இலியானாவுக்கும், கடைசியாக வெளியான லியோ படத்தில் திரிஷாவுக்கும் விஜய் தான் லிப் கிஸ் அடித்துள்ளார். கேரளாவில் உணவு ஊட்டிவிடுகிறேன் என்கிற பெயரில் விஜய்க்கு கேரள ரசிகர்கள் லிப் கிஸ் அடித்து விட்டார்கள் என விஜய் குறித்து தவறாக பேசி ரசிகர்களிடம் வசமாக சிக்கியிருக்கிறார் அந்தணன்.

துனியா விஜய் வீடியோ: கன்னட நடிகர் துனியா விஜய்யின் வீடியோ தான் அது என்றும் ரசிகர்கள் விஜய்க்கு உணவு ஊட்டி விடவில்லை என்றும் சூர்யா ரசிகர்கள் வேண்டுமென்றே கிளப்பி விட்ட ட்ரோல் வீடியோவை பார்த்து உண்மை என அந்தணன் நம்பி விட்டாரா என பலரும் ஷாக் ஆகியுள்ளனர். சினிமாவில் சீனியர் பத்திரிகையாளராக இருக்கும் அந்தணனுக்கே கண்ணு அவிஞ்சு போச்சா என விஜய் ரசிகர்கள் வச்சு செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் சண்டை தான் காரணம்: நடிகர்கள் பற்றிய தவறான தகவல்கள் பரவுவதற்கு ரசிகர்கள் சண்டை தான் காரணம் என்கின்றனர். சூர்யாவின் கங்குவா படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், சூர்யா ரசிகர்கள் தொடர்ந்து விஜய் ரசிகர்களுடன் தொடர்ந்து சண்டை போட ஆரம்பித்துள்ளனர். ஜெயிலர் படத்தின் போது ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே காக்கா - கழுகு சண்டை வெடித்ததை போல தற்போது இந்த சண்டை ஸ்டார்ட் ஆகியிருக்கிறது என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X