Coolie: லோகேஷ் கனகராஜ் First Disaster-ஆ.. வன்மத்தை கொட்டும் இணையவாசிகள்.. படம் நல்லாதானே இருக்கு!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, ஆமிர் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கூலி படம் இன்று அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படம் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டாலும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் தமிழ்நாட்டிற்கு முன்னதாகவே படம் வெளியாகிவிட்டது. இப்படி இருக்கும்போது அங்கு படம் பார்த்த ரசிகர்கள் படம் எப்படி உள்ளது என்பது குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக விஜய் ரசிகர்கள் எக்ஸ் பக்கத்தில் வன்மத்தை கொட்டி வருகிறார்கள்.

வழக்கமாகவே ரஜினிகாந்த் படம் வெளியாகிறது என்றால் விஜய் ரசிகர்களும் விஜய் படம் வெளியாகிறது என்றால் ரஜினி ரசிகர்களும் அஜித் ரசிகர்களும், அஜித் படம் வெளியாகிறது என்றால் விஜய் ரசிகர்களும் சூர்யா படம் வெளியாகிறது என்றால் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களும் இணையத்தில் மோசமாக விமர்சித்து வருவது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் நிதானமாக விமர்சிக்கும் இவர்கள், ஒரு கட்டத்திற்கு மேல், காதுகளால் கேட்க முடியாத, பொது வெளியில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளால் மாறி மாறி வசை பாடிக் கொள்வார்கள்.

Vijay Fans Spreading Fake Review For Rajinikanth Coolie Movie Lokesh Kanagaraj First Disaster
Photo Credit:

இப்படியான ரசிகர்களை உசுப்பி விடுவது போல தான் இசை வெளியீட்டு விழாவில் இவர்களின் பேச்சும் இருந்து வந்துள்ளது. ஒரு காலத்தில் கதையின் நாயகனுக்கு பில்டப் பாடல்கள் இருந்து வந்தது. ஆனால் இப்போது தனிப்பட்ட முறையில் அந்ததந்த நடிகர்களை மட்டும் புகழ்ந்து பாடும் அளவுக்கு பில்டப் பாடல்கள் உருவாக்கப்படுகிறது. அதுவும் மற்ற நடிகர்களை மறைமுகமாக விமர்சிக்கும் பாடல் வரிகளும் உள்ளது. ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற தலைவர் அலப்பறை, குட் பேட் அக்லி படத்தில் இடம் பெற்ற திரையரங்கம் அலறணும், வாரிசு படத்தில் இடம்பெற்ற தீ தளபதி பாடல் போன்றவற்றை அந்த வரிசையில் வைக்கலாம்.

Vijay Fans Spreading Fake Review For Rajinikanth Coolie Movie Lokesh Kanagaraj First Disaster
Photo Credit:

படம் நன்றாக இல்லை: இதன் நீட்சிதான் கூலி படத்தை காட்டு மொக்கைப் படம் என்று இணையத்தில் மோசமாக விமர்சிக்க காரணம். கூலி படத்தை படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தை நன்றாக உள்ளது என கூறி வருகிறார்கள். ஆனால் ட்விட்டர் பக்கத்தில் வழக்கம் போல் விஜய் ரசிகர்கள் சிலரும் விஜய் ரசிகர்கள் என்ற போர்வையில் பலரும் வன்மத்தை கொட்டி வருகிறார்கள்.

வன்மம்: குறிப்பாக படம் நன்றாக இல்லை, லோகேஷ் கனகராஜின் மிக மோசமான படம். லோகேஷ் கனகராஜின் முதல் தோல்விப் படம். லோகேஷ் கனகராஜ் கமல் ரசிகர், அதனால் தான் வேண்டும் என்றே ரஜினிக்கு இப்படி ஒரு காட்டு மொக்கை படத்தைக் கொடுத்துள்ளார் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் படம் பார்த்த பலரும் படம் நன்றாக உள்ளது எனவும், ரஜினிதான் படத்தில் வேற லெவலில் இருக்கிறார் எனவும், ஜெயிலருக்கு அடுத்து ரஜினிக்கு இந்த படம் தான் எனவும், ஆயிரம் கோடிகள் வசூலிக்குமா என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் படம் கன்ஃபார்ம் ஹிட் எனவும் பாராட்டி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X