படையே வந்தாலும் பராசக்தி ஓடாது.. இணையத்தில் வன்மத்தை கொட்டிக் கொண்டு இருக்கும் விஜய் ரசிகர்கள்!

சென்னை: வழக்கமாக திருவிழாக் காலம் என்றாலே திரைத்துறையினருக்கு பெரும் ஆவல் குடி புகுந்துவிடுகிறது. அந்த வகையில் வரும் பொங்கலுக்கு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படம் வெளியாகவுள்ளது. அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள பராசக்தி படம் வெளியாகவுள்ளது. இந்த படங்களின் ரிலீஸ்க்கு இடையில் 5 நாட்கள் இடைவெளி இருந்தாலும் திரைத்துறையில் அடிபடும் பேச்சுக்கள் எல்லாம் அரசியல் கலந்தவையாக உள்ளன.

அதாவது நடிகர் விஜயின் கடைசி படம் ஜன நாயகன், இந்த படத்திற்கு பின்னர் சினிமாவில் நடிக்கப்போவதில்லை வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் அரசியல் இருக்கிறதோ இல்லையோ, படக்குழு வெளியிட்டுள்ள முதல் பாடலில் அரசியல் வரிகள் இடம் பெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல் விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டில் ஆளும் கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

Vijay Fans Spreading Negativity About Sivakarthikeyan Parasakthi Movie Because Of Jana Nayagan Release
Photo Credit:

பராசக்தி: இது ஒரு புறம் இருக்க, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அவரது 25வது படம் பராசக்தி. இந்த படத்தை ஆளும் கட்சிக்கு மிகவும் நெருக்கமான தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படி இருக்கும்போது, பராசக்தி படத்தின் டைட்டில் என்பது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, கதை, வசனம் எழுதி உருவாகி, பெறும் வெற்றியைப் பெற்ற படம். அப்படி இருக்கும்போது, இந்த படத்தின் பெயருக்காகவே இந்த படத்தை பெரும் வெற்றிப் படமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் இருக்கலாம்.

ரஜினி - கமல்: இது மட்டும் இல்லாமல், தங்களை அரசியல் களத்தில் அதிகம் விமர்சிக்க கூடிய விஜய்யின் படத்திற்கு எதிராக மிகப்பெரிய வணிக வெற்றியை ஈட்டி விட வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இப்படி இருக்கும்போது, பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் என இருவரும் கலந்து கொள்ள உள்ளார்கள் என்று தகவல்கள் கடந்த சில தினங்களாக பேசப்பட்டு வருகிறது.

Vijay Fans Spreading Negativity About Sivakarthikeyan Parasakthi Movie Because Of Jana Nayagan Release
Photo Credit:

வன்மம் கக்கும் விஜய் ரசிகர்கள்: வழக்கமாகவே விஜய் ரசிகர்கள் இணையத்தில் மிகவும் ஆக்டிவானவர்கள். விஜயின் படம் குறித்த தகவல்கள் ஏதாவது வெளியாகிறது என்றால் அதை சில மணி நேரங்களுக்குள் டிரெண்டாக்கி விடுவார்கள். அப்படி இருக்கும்போது, பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி மற்றும் கமல் கலந்து கொள்ள உள்ளார்கள் என்ற தகவல் வெளியானதும், இணையத்தில் ரியாக்ட் செய்ய தொடங்கிவிட்டார்கள்.

மிக மோசம்: குறிப்பாக, " படையே வந்தாலும் பராசக்தி ஓடாது, கோலிவுட்டே கிளம்பி வந்தாலும் பராசக்தி ஓடாது என்றும், பராசக்தி ரிலீஸ்க்கு முன் பராசக்தி ரிலீஸ்க்குப் பின் என்று சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோரின் புகைப்படங்களை வைத்து மீம் எல்லாம் உருவாக்கி பதிவிட்டு வருகிறார்கள். சிலர் ரஜினி மற்றும் கமல்ஹாசனி மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள். இவை தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த சினிமா ரசிகர்கள் விஜய் ரசிகர்கள் ஏன் இப்படி வன்மத்தை கொட்டி வருகிறார்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Vijay Fans Spreading Negativity About Sivakarthikeyan Parasakthi Movie Because Of Jana Nayagan Release
Photo Credit:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X