இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. கேரளாவில் வேலையை தொடங்கிய விஜய் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் விஜய் மகேஷ் பாபுவின் மரம் நடும் சவாலை ஏற்று மரக்கன்று நட்டதை தொடர்ந்து அவரது ரசிகர்களும் அந்தப் பணியை தொடங்கியுள்ளனர்.

அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு, தனது பிறந்த நாளை இதைவிட சிறப்பாக கொண்டாட முடியாது என மரக்கன்று ஒன்றை நட்டார்.

அந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து நான் கிரீன் இந்தியா சவாலை நடிகர் விஜய், நடிகை சுருதிஹாசன், நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோருக்கு விடுக்கிறேன் என ஆக்கப்பூர்வமாக டிவிட்டியிருந்தார்.

சவால் ஏற்பு

சவால் ஏற்பு

மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய், நேற்று தனது தோட்டத்தில் மரக்கன்றை நட்டார். அந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். மேலும் மகேஷ் பாபு காரு இது உங்களுக்காக என்று அவர் விட்ட சாவலை ஏற்றதாக கூறினார்.

பலரும் பாராட்டு

பலரும் பாராட்டு

விஜயின் இந்த செயல் வைரலானது. அவரது போட்டோக்களும் பலரால் ரீடிவிட் செய்யப்பட்டுகிறது. ரசிகர்கள் ஒரு புறம் விஜயை பாராட்ட, திரைத்துறை பிரபலங்களும் அவரை விஜயின் செயலை நல்ல முன்னெடுப்பு என புகழந்தனர்.

கோடான கோடி ரசிகர்கள்

கோடான கோடி ரசிகர்கள்

நடிகர் விவேக், மில்லியன் கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள விஜய் போன்ற நடிகர்கள் இதுபோன்ற செயல்களில் இறங்கினால் அவர்களின் கோடான கோடி ரசிகர்களும் இதை பின்பற்றுவார்கள் என கூறினார். இதேக் கருத்தை பல்வேறு பிரபலங்களும் முன்வைத்தனர்.

Recommended Video

Samantha Nargajuna Green India Challenge • Blissful Video
ஆரம்பித்த ரசிகர்கள்

ஆரம்பித்த ரசிகர்கள்

அவர்கள் கூறியதை போலவே தலைவன் செய்ததை பின்தொடர தொடங்கியிருகிறார்கள் அவரது ரசிகர்கள். கேரளாவில் உள்ள விஜய் ரசிகைகள் மரம் நடும் பணியை தொடங்கியுள்ளனர். டிவிட்டரில் கேரளா விஜய் ஃபேன்ஸ் க்ளப் ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் மரம் நடும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளது. இதேபோல் விஜய் ரசிகர்கள் பலரும் தாங்கள் மரம் நடும் போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X