கர்மா யாரை விட்டுச்சு?: விஜய் ரசிகர்களை பார்த்து சிரிக்கும் தல, சூர்யா ரசிகர்கள்
Recommended Video
சென்னை: விஜய் ரசிகர்களின் நிலையை பார்த்து அஜித், சூர்யா ரசிகர்கள் பாவப்பட்டாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
அட்லி இயக்கத்தில் விஜய் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடித்து வரும் படம் தளபதி 63. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சில முக்கிய காட்சிகளை டெல்லியில் படமாக்க உள்ளனர்.
விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.

அப்டேட்
தளபதி 63 பற்றி அப்டேட் எதுவும் இல்லாமல் இருப்பது விஜய் ரசிகர்களுக்கு கவலையாக உள்ளது. தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் தளபதி 63 அப்டேட் கேட்டு அடிக்கடி ட்வீட் செய்கிறார்கள் ரசிகர்கள். இல்லை என்றால் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானிடம், சார் நீங்களாவது ஏதாவது அப்டேட் கொடுங்களேன் ப்ளீஸ் என்று பாவம் போன்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.
அர்ச்சனா
விஜய் ரசிகர்கள் அப்டேட் கேட்பதை பார்த்த அர்ச்சனா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நானே உங்களுடன் சேர்ந்து தயாரிப்பாளரிடம் அப்டேட்டுகள் கேட்பேன் என்பதை உங்களில் பலர் மறந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். சரியான நேரத்தில் தளபதி 63 அப்டேட் வெளியிடப்படும். உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாங்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அதிருப்தி
அர்ச்சனாவின் ட்வீட் விஜய் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. அந்த ட்வீட்டை பார்த்த அவர்களோ, அடப் போக்கா எப்ப பார்த்தாலும் ஏதாவது காரணம் தான் சொல்கிறீர்களே தவிர அப்டேட் கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள் என சலிப்புடன் தெரிவித்துள்ளனர். முன்னதாக அப்டேட் கேட்டபோது நேசமணி மருத்துவமனையில் இருக்கும்போது அப்டேட் எல்லாம் கேட்கக் கூடாது என்று கூறி தளபதி ரசிகர்களை கலாய்த்தார் அர்ச்சனா என்பது குறிப்பிடத்தக்கது.
என்.ஜி.கே.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்தபோது விஸ்வாசம் அப்டேட் கேட்டு தல ரசிகர்கள் கெஞ்சினார்கள். மேலும் செல்வராகவனின் என்.ஜி.கே. படத்தில் சூர்யா நடித்தபோது அவரின் ரசிகர்களும் அப்டேட் கேட்டு ட்விட்டரில் கதறினார்கள். அஜித், சூர்யா ரசிகர்கள் என்ன தான் கெஞ்சினாலும் அப்டேட் கிடைக்கவில்லை. அப்பொழுது அவர்களை பார்த்து விஜய் ரசிகர்கள் நக்கலாக சிரித்தனர். தற்போது தளபதி 63 அப்டேட் கேட்டு கெஞ்சும் விஜய் ரசிகர்களை பார்த்து கர்மா இஸ் பூமராங் என்கிறார்கள் அஜித், சூர்யா ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











