அடேங்கப்பா.. டிரைலருக்கே இந்த கூட்டமா? திக்குமுக்காடிப்போன ரோகிணி தியேட்டர்.. இதுதான் பீஸ்ட் மோட்!

சென்னை: நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்பட டிரைலர் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ள நிலையில், ரோகிணி திரையரங்கும் முன்பாக ஆயிரக் கணக்கான விஜய் ரசிகர்கள் கூடி உள்ளனர்.

விஜய் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக தியேட்டரில் பீஸ்ட் டிரைலரை வெளியிட ரோகிணி திரையரங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

மொபைல் ஃபிளாஷ் உடன் விஜய் ரசிகர்கள் கோயம்பேட்டையே கதிகலங்க வைத்துள்ளனர்.

பீஸ்ட் டிரைலர் வருது

பீஸ்ட் டிரைலர் வருது

இன்னும் சற்று நேரத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தின் மரண மாஸான டிரைலர் வெளியாக காத்திருக்கிறது. விஜய் ரசிகர்கள் பீஸ்ட் டிரைலரை வேற லெவல் ரெக்கார்டு படைக்க வைக்க ஏகப்பட்ட பிளான்களை போட்டு வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நேற்று முதலே விஜய் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து அப்டேட்களை தவறாமல் போட்டு வருகிறது.

சன் பிக்சர்ஸை பாராட்டி

சன் பிக்சர்ஸை பாராட்டி

பீஸ்ட் படத்தின் புரமோஷனை சன் பிக்சர்ஸ் ஆரம்பிக்கவில்லை. அடுத்த நாள் வெளியாக போகும் கேஜிஎஃப் 2 படத்தின் டிரைலர் எல்லாம் வெளியாகி விட்டது என சன் பிக்சர்ஸை விஜய் ரசிகர்கள் கண்டபடி திட்டித் தீர்த்து வந்த நிலையில், பீஸ்ட் புரமோஷனை கிக் ஸ்டார்ட் பண்ணியுள்ள சன் பிக்சர்ஸை விஜய் ரசிகர்கள் வெரைட்டியாக மீம் போட்டு பாராட்டி வருகின்றனர்.

பீஸ்ட் வெயிட்டிங்

பீஸ்ட் வெயிட்டிங்

ரசிகர்களை சந்திக்க நம்ம பீஸ்ட் வெயிட்டிங் என ப்ளூ கலர் ஷர்ட்டில் கையில் ஜூஸ் கிளாஸ் உடன் நடிகர் விஜய் செம க்யூட்டாக இருக்கும் இன்னொரு எக்ஸ்க்ளூசிவ் பீஸ்ட் ஸ்டில்லை வெளியிட்டு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது சன் பிக்சர்ஸ். அந்த போட்டோவை பேனர்களாகவும், பைக் ஸ்டிக்கர்களாகவும் விஜய் ரசிகர்கள் ஒட்டி வருகின்றனர்.

ரோகிணி தியேட்டரில்

ரோகிணி தியேட்டரில்

பீஸ்ட் படத்தின் டிரைலர் மாலை 6 மணிக்கு செம ஷார்ப்பாக வரவுள்ள நிலையில், சென்னை கோயம்பேடு அருகே உள்ள ரோகிணி தியேட்டரிலும் அதே நேரத்தில் பீஸ்ட் படத்தின் டிரைலரை தியேட்டரில் திரையிட அனைத்து ஏற்பாடுகளையும் ரோகிணி தியேட்டர் செய்துள்ளது. மேலும், விஜய் ரசிகர்களுக்கு அழைப்பும் விடுத்திருந்தது.

விஜய் ரசிகர்கள் கூட்டம்

பீஸ்ட் டிரைலரை வெறும் மொபைல் மற்றும் டிவியில் எல்லாம் பார்க்கக் கூடாது பெரிய திரையில் தான் நடிகர் விஜய்யை தரிசிக்க வேண்டும் என நினைத்த ரசிகர்கள் ஆயிரக் கணக்கில் ரோகிணி தியேட்டர் முன் கூடி நின்று மொபைல் லைட் ஃபிளாஷ் அடித்து ஆரவாரம் செய்யும் வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

பீஸ்ட் எமோஜி

பீஸ்ட் எமோஜி

பிகில், மாஸ்டர் படங்களை தொடர்ந்து பீஸ்ட் படத்திற்கும் புதிய எமோஜியை படக்குழு உருவாக்கி உள்ளது. பீஸ்ட் டிரைலர் வெளியாவதை முன்னிட்டு தற்போது சமூக வலைதளங்களில் பீஸ்ட் எமோஜி ஆக்டிவேட் ஆகி உள்ளது. விஜய் ரசிகர்கள் #Beast, #BeastModeOn உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளுடன் பீஸ்ட் எமோஜியை பயன்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X