ட்ரென்ட்டாகும் #LongLiveVIJAY! திக்குமுக்காடும் டிவிட்டர்!
சென்னை: நடிகர் விஜய் குறித்து #RIPactorVIJAY ட்ரென்ட்டானதை தொடர்ந்து தற்போது #LongLiveVIJAY என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகியுள்ளது.
அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் அடிக்கடி டிவிட்டரில் மோதிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. மேலும் ஒரு நடிகர் தொடர்பான ஹேஷ்டேக் ஏதாவது ட்ரென்ட்டானால் உடனே மற்றொரு நடிகர் குறித்த ஹேஷ்டேக் ஒன்றும் ட்ரென்ட்டாகிவிடும்.
விஜயின் சிங்கப்பெண்ணே பாடலின் 4 நாள் சாதனையை அஜித்தின் அகலாதே பாடல் 2 நாளில் பீட் செய்ய அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் #RIPactorVIJAY என்கிற ஹேஷ்டேகை ட்ரென்ட்டாக்கினர்.

போட்டியாக
இதற்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் சூடானது டிவிட்டர். இந்நிலையில் #LongLiveVIJAY என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் போட்டியாக ட்ரென்ட்டாக்கி வருகின்றனர்.
அர்ச்சனா கல்பாத்தி
இதுதொடர்பாக பிகில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி பதிவிட்டுள்ள டிவிட்டில் எல்லாவற்றிலும் அனைவரிடமும் நல்லதைக் காணும் திறனால் நடிகர் விஜய் பல லட்சம் இதயங்களை வென்றுள்ளார் என டிவிட்டியுள்ளார்.
ரசிகர்களை மதிக்கும் நடிகர்
ரசிகர்களை மதிக்கும் ஒரே நடிகர் எங்கள் அண்ணா மட்டும்தான் தலைவா என்று பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.
சுவாசிக்கிற கூட்டம்
வெறும் #நேசிக்கிற கூட்டம் நினைச்சு தப்பா எடை போட்டுட்டீங்க...
நாங்க எங்க தலைவன உயிரா நினைச்சி #சுவாசிக்கிற கூட்டம் டா. என்று பதிவிட்டுள்ளார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications