விஜய்.. ஜோசப் விஜய்.. மிரட்டும் ஆரி.. ஐடி அட்டகாசம், குழந்தை கடத்தல்.. தெறிக்குது அலேகா டிரைலர்!

சென்னை: நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான ஆரி அர்ஜுனனின் புதுப்படமான அலேகா படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சமீபத்தில், பகவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், அலேகா படத்தின் முதல் பார்வை மற்றும் டிரைலர் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

மக்கள் சக்தி

மக்கள் சக்தி

பிக் பாஸ் வீட்டில் பாலாஜி முருகதாஸ், ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆரியை எப்படியாவது வெளியே அனுப்பி டைட்டிலை தட்டிச் செல்ல வேண்டும் என போராடி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு எல்லாம் சரியான சவாலாக ஆரி அந்த வீட்டில் இருந்து வருவதால், அவருக்கு மக்கள் சக்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டைட்டில் கிடைக்குமா?

டைட்டில் கிடைக்குமா?

பிக் பாஸ் ரசிகர்களின் ஃபேவரைட் போட்டியாளராக இருக்கும் ஆரி அர்ஜுனன் தான் இந்த சீசன் வின்னர் என மக்கள் முடிவு செய்து விட்டனர். ஆனால், பிக் பாஸ் டீம் அவருக்கு நிச்சயம் டைட்டில் கொடுக்காது என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. பாலா, ரியோ, ரம்யாவின் சூழ்ச்சிகளை முறியடித்து டைட்டிலை ஆரி ஜெயிப்பாரா என்பதை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

முதல் இலுமினாட்டி

முதல் இலுமினாட்டி

பிக் பாஸ் வீட்டுக்குள் சமீபத்தில் ஆரியின் அடுத்த படமான பகவான் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரிலீசானது. பகவான் தி ஃபர்ஸ்ட் இலுமினாட்டி என வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்ட அந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த ரம்யாவின் சகோதரரும் சோமின் சகோதரரரும் ஆரியிடம் அந்த படம் குறித்து பாராட்டி பேசினார்கள்.

அலேகா டிரைலர்

அலேகா டிரைலர்

இந்நிலையில் தற்போது நடிகர் ஆரி அர்ஜுனனும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான ஐஸ்வர்யா தத்தா இருவரும் இணைந்து நடித்த அலேகா படத்தின் டிரைலர் வெளியாகி மிரட்டுகிறது. செம ஹேண்ட்ஸம் ஆகவும் சண்டை காட்சிகளில் டெரராகவும் ஆரி மாஸ் காட்டுகிறார். ஐடி அட்டகாசம், குழந்தை கடத்தல் என ஏகப்பட்ட விஷயங்கள் இந்த படத்தில் இருப்பதை டிரைலர் காட்டுகிறது.

விஜய்.. ஜோசப் விஜய்

விஜய்.. ஜோசப் விஜய்

இந்த படத்தில் ஆரிக்கு பெயரே சூப்பராக வைத்துள்ளனர். டிரைலர் இறுதியில், போலீஸ் நிலையத்தில் நடிகர் நாசர் உன் பேரு என்னடா என கேட்கும் போது, விஜய் என சொல்கிறார் ஆரி. முழு பெயரையும் சொல்லுடா என போலீசார் அதட்டும் போது ஜோசப் விஜய் என ஆரி சொல்லும் இடத்திற்காகவே தளபதி ரசிகர்கள் ரிப்பீட் மோடில் அந்த டிரைலரை பார்த்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

டபுள் மீனிங்கா இருக்கே

டபுள் மீனிங்கா இருக்கே

குடிக்காத பொண்ணுங்க எல்லாம் பத்தினியும் கிடையாது.. குடிக்கிற பொண்ணுங்க எல்லாம் தப்பான பொண்ணுங்களும் கிடையாது என்றும் ஆரி பேசும் இன்ட்ரோ வசனம் மற்றும் பசங்க நீங்க தண்ணியடிச்சிட்டு லவ்வ சொன்னா ஃபீலு.. அதே பொண்ணுங்க நாங்க தண்ணியடிச்சிட்டு லவ்வ சொன்னா போங்கா என பேசும் வசனங்கள் டபுள் மீனிங் வசனமாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஓவர் கிளாமர்

ஓவர் கிளாமர்

பிக் பாஸ் இரண்டாம் சீசன் போட்டியாளரான ஐஸ்வர்யா தத்தா ஆரியுடன் இணைந்து ஓவர் கிளாமராக நடித்துள்ளது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது. ஏற்கனவே வெளியான முதல் போஸ்டரிலும் இரு கால்கள் படுக்கையில் இருக்கும்படி காட்டியிருப்பார்கள். ஐடி லீலை, கள்ளக் காதல், குழந்தை பராமரிப்பின்மை, குழந்தை கடத்தல் என ஏகப்பட்ட விஷயங்களை அலேகா பேசப்போவது நிச்சயம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X