Bigil: சொல்லியடிக்கும் கில்லி... தீபாவளிக்கு வரான்... பிகிலை கொண்டாடி தீர்க்கும் விஜய் ரசிகாஸ்!
பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் டிவிட்டரில் டிரெண்டிங்காகி வருகிறது.
Recommended Video
சென்னை: விஜய் படத்தில் பிகில் என பெயர் வைக்கப்பட்டுள்ளதை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.
ஏஜிஸ் சினிமாஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு பிகில் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் 45வது பிறந்தநாள் வரும் 24ம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு படக்குழு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

பர்ஸ்ட் லுக்கில் இரண்டு வேடம்
பிகில் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அப்பா, மகன் என இரண்டு பேரின் லுக்கும் இடம்பெற்றுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் பாராட்டு வருகின்றனர்.
தீபாவளிக்கு வரான்
"ஹேய் சீனா அவன் வந்தானா பொடி ஐ ஸ்கூலு புள்ளைங்க எல்லாம் செதறு.... தியேட்டரு தெறிக்க யார் இங்கு களிக்க சொழட்டி " பிகிலடி "மெர்சல் அரசன் வாரான்... தீபாவளிக்கு வாரான்", என ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.
சோனி நிறுவனம் டிவீட்
"காத்திருந்தது போதும். பிகில் தான் தலைப்பு. எதிர்பாராததை எதிர்பாருங்கள். ஏனெனில் முந்தைய படங்களை விட இது பெரியது" என சோனி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
உலக அளவில் இடம் பிடித்த தளபதி
இன்று காலை முதலே டிவிட்டரில் டிரெண்டிங்கில் முதல் மூன்று இடங்களில் இடம்பிடித்து வருகிறது தளபதி 63. பர்ஸ்ட் லுக் வெளியானதும் முதல் நான்கு இடங்களிலும் விஜய் படம் தான் டிரெண்டிங்கில் உள்ளது என ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார் இந்த ரசிகர்.
சொல்லியடிக்கும் கில்லி
"தெறி,மெர்சல் மாதிரி சொல்லி அடிக்கும் கில்லியாக இந்த பிகில் தளபதிக்கு அமையும்,அருமையான பிறந்தநாள் பரிசு", என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











