ஐயோ FDFS போச்சே.. கொரோனாவை திட்டித் தீர்க்கும் தளபதி ரசிகர்கள்.. டிரெண்டாகும் #MasterFDFS

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதை தாங்க முடியாத தளபதி ரசிகர்கள் கொரோனாவை திட்டித் தீர்த்து #MasterFDFS ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Recommended Video

Master மோதல் | Thalapapthy Vijay | Lokesh Kanagaraj | Lock Down

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் தளபதி விஜய்யின் 64வது படமாக ஆரம்பிக்கப்பட்ட படம் மாஸ்டர்.

மாநகரம், கைதி படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், மிகப்பெரிய பட்ஜெட்டில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஸ்ரீநாத், சேத்தன், ஸ்ரீமன், விஜே ரம்யா, செளந்தர்யா என நட்சத்திர பட்டாளத்தையே வைத்து இயக்கிய படம் தான் மாஸ்டர்.

தள்ளிப்போன ரிலீஸ்

தள்ளிப்போன ரிலீஸ்

அனிருத் இசையில் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடல் காதலர் தினத்தன்று வெளியாகி வேற லெவல் ஹிட் அடித்தது. தொடர்ந்து, மாஸ்டர் பட அப்டேட்கள் திட்டமிட்டபடி வந்து கொண்டே இருந்தன. மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக அதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

டிரெண்டாகும் ரசிகர்களின் கனவு

மாஸ்டர் படம் இன்று ரிலீசாகியிருக்க வேண்டிய படம் என ரத்னகுமார், போட்ட ட்வீட்டை தொடர்ந்து #MasterFDFS ஹாஷ்டேக்கை தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்நேரம், தியேட்டர்களை திருவிழாக் கோலம் போல ஆக்கியிருப்போம் என்றும், தளபதி தரிசனம் கிடைத்திருக்கும் என்றும் அழுது புலம்பி வருகின்றனர்.

கொரோனா மட்டும் இல்லைன்னா

இந்த கொரோனா மட்டும் இல்லைன்னா இந்நேரம் எப்படி இருந்திருக்கும்.. தளபதி இன்ட்ரோ சீன் ஸ்டேட்டஸ்ல வச்சிருப்பேன்.. அதிகாலை 4 மணிக்கு ஸ்பெஷல் ஷோ.. பெரட்டி வுடு, செதற வுடு என வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் பிரகாஷ் ராஜ் சொல்வது போல வசனங்களை போட்டு விஜய் ரசிகர்கள் மீம்களை வைரலாக்கி வருகின்றனர்.

ரோகிணி தியேட்டர்

இன்னைக்கு மட்டும் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகி இருந்தால்.. இந்நேரம் சென்னை RohiniSilverScr தியேட்டர் இப்படி தான் திருவிழா மாதிரி இருந்து இருக்கும் என சர்க்கார் படத்தின் FDFS கொண்டாட்ட புகைப்படங்களை பதிவிட்டு, தளபதி ரசிகர்கள் தங்களின் சோகத்தை ஆற்றி வருகின்றனர்.

வெற்றியை நோக்கி

முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் கொண்டவர்கள்.... தோல்வியை கடந்து வெற்றியை நோக்கி பயணிக்கின்றனர் என நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட மாஸ் செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு இந்த ரசிகர் ஆறுதலான அட்வைஸை சக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

பாலாபிஷேகம், பட்டாசு

திட்டமிட்டபடி இந்நேரம் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகி இருந்தால், தலைவனுக்கு பாலாபிஷேகம் பண்ணி, பட்டாசு வெடிச்சு தெறிக்க விட்ருப்பேன் என இந்த ரசிகர் மெர்சல் படத்தின் போது செய்த அலப்பறைகளை ட்வீட் செய்துள்ளார். மேலும், எதுக்குத்தான் இந்த கொரோனா நம்ம நாட்டுக்கு வந்துச்சோ என தளபதி ரசிகர்கள் அதனை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

வவ்வால் சூப்

சீனாவின் வூஹான் மாகாணத்தில் எவனோ ஒரு சீனாக்காரன் குடித்த வவ்வால் சூப் தான் கொரோனா வைரஸ் பரவ காரணமாக இருந்ததாக எழுந்த தகவல்களை நம்பும் சில ரசிகர்கள், அந்த வவ்வால் சூப் குடிச்சவனையும், கொரோனா வைரஸையும் கண்டபடி திட்டித் தீர்த்து பதிவிட்டு வருகின்றனர்.

சொன்னா புரியாது

மாஸ்டர் படத்தின் ரிலீசுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்த ரசிகர்கள், அந்த படத்தின் ரிலீஸ் தாமதமான சோகத்தில் தவித்து வருகின்றனர். அதனை இப்படியொரு மீமாக க்ரியேட் செய்து இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார். "ஏன் டா சோகமா இருக்க என சாரா கேட்க, விட்ரா உனக்கு சொன்னா புரியாது" என அசோக் செல்வன் சொல்லும் ஓ மை கடவுளே காட்சிகள் வைரல் மீமாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X