ஓடிடியா, தியேட்டரா? மாஸ்டர் ரிலீஸ் குழப்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேட்கும் ரசிகர்கள்!

By

சென்னை: மாஸ்டர் பட ரிலீஸ் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம், மாஸ்டர். விஜய் ஹீரோவாக நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி வில்லன். மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

மாஸ்டர் ரிலீஸ்

மாஸ்டர் ரிலீஸ்

இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால், லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மாஸ்டர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். அவர் இசையில் பாடல்கள் ஹிட்டாகி உள்ளன.

பேராசிரியர் விஜய்

பேராசிரியர் விஜய்

இதில் பேராசிரியராக நடித்திருக்கிறார் விஜய். இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறி வருகின்றனர். லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சமீபத்தில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன.

தியேட்டர்கள் மூடல்

தியேட்டர்கள் மூடல்

ஆனால், ரசிகர்கள் அதிகமாக வரவில்லை என்பதால் காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலை இருக்கிறது. பல பகுதிகளில் தியேட்டர்களை மூடி வருகின்றனர். இந்நிலையில், ஓடிடியில் படங்களை சில தயாரிப்பாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படம் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

தியேட்டரில் வெளியாகும்

தியேட்டரில் வெளியாகும்

இதனால், மாஸ்டர் படமும் ஓடிடியில் வெளியாக இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதை மாஸ்டர் படக்குழு மறுத்து வருகிறது. அதோடு பொங்கலுக்கு படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இப்போது நெட்பிளிக்ஸில் படம் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தவறான தகவல்

தவறான தகவல்

ஆனால், அது தவறான தகவல் என்று மாஸ்டர் பட வட்டாரங்கள் கூறியுள்ளன. இதற்கிடையே, மாஸ்டர் படம், தியேட்டரில்தான் வெளியாக வேண்டுமென விஜய் ரசிகர்கள், படக்குழுவுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். பட ரிலீஸ் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நம்ப வேண்டாம்

நம்ப வேண்டாம்

இதற்காக #MasterOnlyOnTheatres என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். இதில், மாஸ்டர் படத்தை தியேட்டரில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அதோடு, படம் தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சில ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X