Just In
- 44 min ago
மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்!
- 56 min ago
தமிழில் ரீஎன்ட்ரி.. நெல்சன் இயக்கும் படம்.. 'தளபதி' விஜய் ஜோடியாகிறாரா நடிகை பூஜா ஹெக்டே?
- 1 hr ago
அடடா.. ஆரி இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளாரா.. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாம்!
- 1 hr ago
இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்?
Don't Miss!
- News
தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தடுப்பூசி
- Sports
3 விக்கெட்டுகள்... அரைசதம்... இந்திய அணியை தூக்கி நிறுத்திய இளம்வீரர்கள்.. செம ட்விஸ்ட்!
- Automobiles
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆன்லைன் புக்கிங் அமோகம்.. விஜய்யின் 'மாஸ்டர்' டிக்கெட் வாங்க முண்டியடித்த ரசிகர்கள்..!
சென்னை: விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டிக்கெட்டுகளை ரசிகர்கள் ஆர்வத்துடன் பெற்று செல்கின்றனர்.
கொரோனாவால் ரிலீஸ் தள்ளி போன 'மாஸ்டர்' படம், வரும் 13 ஆம் தேதி வெளியாகிறது.
எனக்கு கொரோனா அறிகுறி.. என்னை சந்திச்ச எல்லாரும் டெஸ்ட் பண்ணிக்குங்க.. பிரபல நடிகை அறிவிப்பு
அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் இந்தப் படத்தை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

கல்லூரி பேராசிரியர்
இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாகவும் மாளவிகா மோகனன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். நடிகை, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

பாடல்கள் ஹிட்
அனிருத் இசையில் பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது. கொரோனாவுக்கு பிறகு வெளியாகும் முதல், பெரிய ஹீரோ படம் 'மாஸ்டர்' என்பதால், இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

டிக்கெட் புக்கிங்
இந்நிலையில் இந்தப் படத்தின் டிக்கெட் புக்கிங் சில நாட்களுக்கு முன் தொடங்கியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ரசிகர்கள் முண்டியடித்து டிக்கெட்டுகளை வாங்கினர். சென்னையில் சில தியேட்டர்களில் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ரசிகர்கள் கூட்டமாக கூடி டிக்கெட்டுகளை பெற்றனர்.

ஐந்து நாட்களுக்கு
பல்வேறு பகுதிகளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாக ரசிகர்கள் சமூக வலை தளங்களில் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான தியேட்டர்களில் ரசிகர் மன்றத்தினர் மொத்தமாக டிக்கெட்டுகளை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் ஐந்து நாட்களுக்கு டிக்கெட்டுகளை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

டிக்கெட் புக்கிங்
தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களிலும் 'மாஸ்டர்' டிக்கெட் விற்பனை சூடு பிடித்துள்ளது. ஆன்லைனில் ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் புக்கிங் செய்வதாகக் கூறப்படுகிறது. மலேசியாவில் ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை பெற்று சென்றுள்ளனர். இந்நிலையில், #mastertickets என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.