டிரெண்டாகும் #அன்று_MGR_இன்று_VIJAY ஹாஷ்டேக்.. ட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!
சென்னை: புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு தலைவி படக்குழு அரவிந்த் சாமியின் எம்.ஜி.ஆர் லுக் வெளியிட்டு டிரெண்ட் ஆக்கியது.
இந்நிலையில், தற்போது விஜய் ரசிகர்களும் ட்விட்டரில் களமிறங்கியுள்ளனர். #அன்று_MGR_இன்று_VIJAY என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Recommended Video
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.. மரியாதைக்குரிய "வாத்தியார்".. மறக்க முடியாத எம்ஜிஆர்!
டிரெண்டிங்
எம்.ஜி.ஆர் பிறந்த நாள் ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி வரும் நிலையில், இப்போ என்ன பண்ணலாம் என சிந்தித்த தளபதி ரசிகர்கள், #அன்று_MGR_இன்று_VIJAY என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டை எம்.ஜி.ஆருக்கு பிறகு நன்றாக ஆட்சி செய்ய விஜய்யால் மட்டுமே முடியும் என பதிவிட்டு வருகின்றனர்.
மெர்சல் போஸ்டர்
மெர்சல் படத்தில் தியேட்டரில் எம்.ஜி.ஆர் படம் ஓடிக் கொண்டிருக்கும் போது விஜய் மாஸாக என்ட்ரி கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இந்த டேக்குக்கான சரியான போஸ்டர் இதுதான் என விஜய் ரசிகர்கள் பதிவிட்டு மாஸ் காட்டுகின்றனர்.
ஆன்லைன் அட்டென்டன்ஸ்
ஆன்லைனில் தற்போது எத்தனை புள்ளிங்கோ இருக்கீங்க, எல்லாரும் லைனில் வந்த ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்யுங்க என விஜய் ரசிகர்கள் ஆன்லைன் அட்டென்டன்ஸ் எடுத்து வருகின்றனர்.
ஏழை மக்கள்
என்றும் ஏழை மக்களின் தலைவர்கள் இவர்கள் தான் என எம்.ஜி.ஆர் - விஜய் கம்பேரிசன் படங்களை பதிவிட்டு இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.
இந்த படம் பெர்ஃபெக்ட்
இந்த டேக்குக்கு இந்த படம் பெர்ஃபெக்ட்டா இருக்கு என இந்த ரசிகர் ட்வீட் போட்டு டிரெண்ட் செய்து வருகிறார்.
அட்லீக்கு நன்றி
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் விஜய் இருக்கும்படியான இப்படியொரு ஃப்ரேம் வைத்ததற்கு நன்றி அட்லீ அண்ணா என இந்த ரசிகர் கூறியுள்ளார்.
செல்லப் பிள்ளை
தமிழகத்தில் உள்ள ஏழை தாய்மார்களின் செல்லப் பிள்ளைகள் என எம்.ஜி.ஆர் - விஜய் கம்பேரிசன் புகைப்படங்களை இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.
படம் பேசுது
அடுத்த எம்.ஜி.ஆர்., தளபதி விஜய் தான் என்பதை இந்த படம் தெளிவாக பேசுகிறது என ரசிகர்கள் தொடர்ந்து ட்வீட்களை போட்டு வருகின்றனர்.
அன் அஃபிஷியல் டேக்
தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த டேக் அஃபிஷியல் டேக் கிடையாது. ஆனாலும், தளபதி ரசிகர்கள் இதனை வெறித்தனமாக டிரெண்ட் செய்து வருகின்றனர். இதுதான் விஜய் ரசிகர்களின் வெறித்தனம் என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











