டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் சல்யூட் மை சிங்கப்பெண்ணே.. அசத்தும் விஜய் ரசிகர்கள்!

Recommended Video

Bigil Song : Viral Song Leaked Singapenne | இணையத்தில் வைரலான சிங்கப்பெண்ணே பாடல்-Filmibeat Tamil

சென்னை: விஜய் ரசிகர்கள் சல்யூட் மை சிங்கப்பெண்ணே என்ற ஹேஷ்டேக்கை ட்ரெட்டாக்கியுள்ளனர்.

இயக்குநர் அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், நடிகர் விஜய் நடித்து வரும் "பிகில்" திரைப்படத்தின் "சிங்கப்பெண்ணே" என்ற பாடல் அண்மையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்டர்நெட்டில் லீக்கானது.

இதைத்தொடர்ந்து பாடலின் சிங்கிள் ட்ராக்கை படக்குழு கடந்த 23ஆம் தேதி இரவு வெளியிட்டது. பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக உள்ள இந்த பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் சல்யூட் மை பெண்ணே சிங்கப்பெண்ணே என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்துள்ளனர். விஜய் ரசிகர்கள் தங்களின் தாய் மற்றும் குழந்தைகளின் படத்தை சல்யூட் மை தங்கப்பெண்ணே என ஷேர் செய்து வருகின்றனர்.

அக்கா பொண்ணு

என் அம்மா...அக்கா...மாமா பொண்ணு என இந்த போட்டோவை ஷேர் செய்திருக்கிறார் இவர்.

அம்மாதான் பெரிய சொத்து

நம்மிடம் எவ்வளவு சொத்து இருந்தாலும்!! நம் அம்மா தான் நமக்கு பெரிய சொத்து என தாயின் போட்டோவை ஷேர் செய்திருக்கிறார் இந்த ரசிகர்.

என் பிரசவத்தின் வலிகள்

எனக்கு #சிங்கப்பெண் என்னோட அம்மா தான். ஆனா அவுங்க இப்ப என் கூட இல்லை. எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்காங்க எவ்ளோவோ வலிகளை தாங்கி இருக்காங்க. என் பிரசவத்தின் வலிகளை தாங்கிய என் #சிங்கப்பெண்ணே என்று தனது அம்மா குறித்து பெருமைபட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

உயர்ந்து நில்லு

ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு.. உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு.. என தனது தங்கையின் படத்தை பகிர்ந்துள்ளார் இந்த ரசிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X