அடுத்த வாரமாவது வேற நடிகர் படத்த போடுங்க சன் டிவி.. தளபதி ரசிகர்கள் ஒட்டிய தரமான போஸ்டர் #Bigil
சென்னை: தியேட்டர்களில் புதுப்படங்கள் ரிலீசாகாத நிலையில், டிவியில் ஒளிபரப்பப்படும் படங்களுக்கெல்லாம் போஸ்டர்கள் ஒட்டும் அலப்பறை அரங்கேறியுள்ளது.
Recommended Video
இன்று மாலை சன் டிவியில் தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது.
இந்நிலையில், வித விதமான போஸ்டர்களை ஒட்டி விஜய் ரசிகர்கள் அதகளப் படுத்தி உள்ளனர். #Bigil என்ற ஹாஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

பிகில் படம் போடுறாங்க
கடந்த ஆண்டு தீபாவளிக்கு அட்லி இயக்கத்தில் தளபதி விஜய், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, கதிர், இந்துஜா, அம்ரிதா அய்யர், விவேக் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் இன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. கடந்த வாரம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தெறி படம் சன் டே ஸ்பெஷலாக போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிகில் டே
பிகில் படத்தில் வரும் அப்பா ராயப்பன் கேரக்டர் போஸ்டர்களை பதிவிட்டு ஆட்டத்துக்கு ரெடியா என தளபதி ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர். என்னடா இது புதுப்படத்துக்கு போடுறதுக்கு மேல பில்டப் கொடுக்கிறீங்க என்கிற ரேஞ்சுக்கு, இது சன் டே இல்லை பிகில் டே என பட்டையை கிளப்புகின்றனர்.

அடுத்த வாரமாவது
இந்நிலையில், செம கிண்டலாக "சன் டிவிக்கு வேண்டுகோள்! போன வாரம் தெறி போட்டீங்க சந்தோஷம்.. இந்த வாரம் பிகில் போடுறீங்க சந்தோஷம்.. அடுத்த வாரமாவது மத்த நடிகர் படத்த போடுங்க பா.. தளபதி சொன்ன மாதிரி எல்லாரும் நல்லா இருக்கனும்ல" போஸ்டர் ஒட்டி அதகளப்படுத்தி உள்ளனர்.

போடுறா வெடிய
யாரெல்லாம் வாயில் பட்டாசுடன் பக்கா மாஸான மைக்கேல் என்ட்ரியை காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என சில ரசிகர்கள், பிகில் மைக்கேல் என்ட்ரி ஸ்டில்களை போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு வெளியான பிகில் திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

சாய்ங்காலம் தரமான சம்பவம்
டி.ஆர்.பி கிங்காக எப்பவுமே நடிகர் விஜய் தான் இருக்கிறார் என அவரது ரசிகர்கள் அலப்பறை செய்து அதிர விட்டு வருகின்றனர். அடுத்த வாரமும் தளபதி விஜய்யின் படம் தான் போடுவாங்க, கதறுபவர்கள் கதறட்டும் என்றும், சாய்ங்காலம் 6 மணிக்கு பிகில் படத்தின் ஒளிபரப்பை முன்னிட்டு, இன்னொரு தரமான ஹாஷ்டேக் சம்பவம் இருக்கு என்றும் புள்ளிங்கோ பிரள விடுகின்றனர்.


Click it and Unblock the Notifications