என்ன டான்ஸ்.. என்ன ஸ்டைல்.. தளபதி செம.. அரபிக்குத்து பாடலை ட்விட்டரில் தெறிக்கவிடும் ரசிகர்கள் !

சென்னை : பீஸ்ட் திரைப்படத்தின் அரபிக்குத்து பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி இணையத்தில் மாஸ் காட்டி வருகிறது.

அனிருத் இசையமைப்பில் உருவாகி உள்ள இந்த பாடலை ரசிகர்கள் இணையத்தில் தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

பீஸ்ட் திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.

பீஸ்ட்

பீஸ்ட்

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பீஸ்ட் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகள் எப்போது துவங்கும் என்று விஜய் ரசிகர்கள் பெரும் ஏக்கத்துடன் இருந்தார்கள்.

செம ப்ரோமோ

செம ப்ரோமோ

பீஸ்ட் படத்தின் சிங்கிள் பாடலான அரபிக்குத்து பாடல் வரும் 14ஆம் தேதி அதாவது இன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பாடலின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது. அதில், நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் மூன்று பேரும் இணைந்து மாஸ் பர்ஃபாமென்ஸ் கொடுத்து இருந்தனர்.

தாறுமாறான டான்ஸ்

தாறுமாறான டான்ஸ்

இந்த பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில சற்றுமுன்பு பாடல் வெளியானது. அதில், முதலில் தளபதி பிளாக் அண்ட் பிளாக்கிலும், பூஜா ஹெக்டே புல் ஒய்ட் டிரஸிலுல் தாறுமாறான டான்ஸ் ஸ்டெப்ஸ் போட்டுள்ளனர். அடுத்தக்காட்சியில் இருவரும் வெள்ளை நிற உடையில் ஸ்டைலாக நடனமாடி உள்ளனர். வழக்கமாக விஜய் நடனத்தில் பட்டையை கிளப்புவார் ஆனால், இந்த டான்ஸ் மெர்சலாக உள்ளது.

செம குத்து

செம குத்து

இந்த பாடலை பார்த்த விஜய்யின் ரசிகர்கள் என்ன டான்ஸ்.. என்ன ஸ்டைல்.. தளபதி செம என அரபிக் குத்துப்பாடலை ட்விட்டரில் தெறிக்கவிட்டு வருகின்றனர். இந்த பாடல் வெளியான அரைமணி நேரத்திலேயே 5 மில்லியன் லைக்குகளை பெற்று டிராண்டாகி வருகிறது. இணையத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் அரபிக் குத்து செம குத்து குத்தி வருகிறது.

இணையத்தில்

அரபிக்குத்து பாடலை அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி இருவரும் இணைந்துப்பாடி உள்ளனர். இவர்கள் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடலை பாடி இருந்தனர். அந்த பாடல் மிகப் பெரிய அளவில் ஹிட்டானது அதே போல இந்த பாடல் செம ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X