வா தளபதி வா! விஜய் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் ட்ரிப்யூட் செய்த பாடல் இணையத்தில் ட்ரெண்ட்
சென்னை: இன்று தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் விஜய் (Vijay Birthday) தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் உச்ச நடிகராக இருந்துவரும் வேளையில், சினிமாவில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகிவிட்டு முழுநேர அரசியல்வாதியாக செயல்படவுள்ளேன் என தமிழக வெற்றிக் கழகத்தினை தொடங்கிய தினத்தில் அறிவித்திருந்தார். தற்போது அவரது நடிப்பில் தி கோட் படம் உருவாகி வருகின்றது. படத்தின் சி.ஜி. வேலைகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டு இருந்தாலும் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகின்றது.
அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து மற்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என விஜய் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே பதற்றத்திற்கு ஆளானது.

கோபப்பட்ட விஜய்: இந்த சம்பவத்தையொட்டி நடிகர் விஜய் திமுக அரசை கடுமையாக விமர்சித்து கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுமட்டும் இல்லாமல் கள்ளக்குறிச்சிக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். விஜய்க்கு இன்று அதாவது ஜூன் 22ஆம் தேதி 50வது பிறந்த நாள். தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் த.வெ.க.,வினர் யாரும் ஈடுபடவேண்டாம் எனவும் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் உத்தரவிட்டுள்ளார்.
தி கோட் அப்டேட்: ஆனாலும் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள தி கோட் படத்தின் அப்டேட்டுகளை மாறி மாறி படக்குழு வெளியிட்டு வருகின்றது. இதுமட்டும் இல்லாமல், இன்று சின்ன சின்ன கண்கள் பாடலும் வெளியாகவுள்ளது. இந்த பாடலை விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரிணி பாடியுள்ளனர். பவதாரிணியின் குரல் ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடல் தொடர்பான அப்டேட்டுகளை விஜய்யும் வெளியிட்டு வருவது, பிறந்த நாள் கொண்டாட்டத்தினை வேண்டாம் எனக் கூறிவிட்டு விஜய் தி கோட் படத்தின் அப்டேட்டுகளை வெளியிட்டு ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட் கொடுக்கின்றாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.
ரீ ரிலீஸ்: மேலும் விஜய்யின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட கத்தி, துப்பாக்கி, போக்கிரி, கில்லி, மாஸ்டர் உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. இதனை ரசிகர்கள் கொண்டாடிய வீடியோக்களும் இணையத்தில் உலா வந்து கொண்டு இருக்கின்றன. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல்வாதிகள் தொடங்கி திரைப்பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
கமல் வாழ்த்து: ஏற்கனவே, நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன், “ அன்புத் தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவரும் கடைசியாக வெளியான விஜய்யின் லியோ படத்தில் நடித்திருந்தனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய கைதி, விக்ரம் மற்றும் லியோ ஆகிய படங்கள் எல்.சி.யூ., என்ற பெயரில் வெளிவந்தது.
தொடர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், விஜய்யின் ரசிகர்கள் விஜய்க்கு ட்ரிப்யூட் செய்யும் வகையில் ”வா தளபதி வா” என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். கருணாகரன் என்ற விஜய்யின் தீவிர ரசிகர் எழுதியுள்ள இந்தபாடலுக்கு சதீஷ் நாதன் என்ற விஜய்யின் மற்றொரு ரசிகர் இசை அமைத்துள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.


Click it and Unblock the Notifications











