For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  #GetWellSoonTHALA போட்டியாக #அய்யோ_அம்மா_பைக்_ரேஸ்.. இதுல கூடவாடா ட்விட்டர் சண்டை.. ஓவரா தெரியல!

  |
  சமூக வலைதளத்தில் GetWellSoonTHALA ஹாஷ்டேக்

  சென்னை: எதிரிக்கே அடிபட்டாலும், என்னான்னு போய் பார்த்து நலம் விசாரிக்கிற பழக்கம் தான் நம்ம பழக்கம்.

  அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே ட்விட்டர் சண்டை நடப்பது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் என்றாலும், தற்போது நடப்பது கொஞ்சம் ஓவர் தான்.

  நெகட்டிவிட்டியை தள்ளி வை பேபின்னு தளபதியே சொல்லியிருக்கும் போது, இப்படி #அய்யோ_அம்மா_பைக்_ரேஸ் என்ற ஹாஷ்டேக்கை டிரெண்டு செய்து வருவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

  என்ன நடந்தாலும் அசரவே மாட்றாரே.. நேத்து அங்க ஆஜர்.. இன்னைக்கு இங்க.. கெத்து காட்டும் அன்புச்செழியன்!

  ஸ்டன்ட் சீன் லீக்

  போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில், தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பைக் ஸ்டன்ட் செய்யும் போது, அஜித் தவறி விழுந்து கைகளிலும், கால்களிலும் அடிபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இது தான் அந்த பைக் ஸ்டன்ட் சீன் என இளைஞர்கள் பைக் ஓட்டி விழும் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

  அப்படியா எனக்கு தெரியாதே

  நடிகர் அஜித் குமாருக்கு நடந்த இந்த விபத்து குறித்து, சில அஜித் ரசிகர்களுக்கே தெரியாது என்றும், அப்படி தங்களை வெளிக்காட்டிக் கொண்டு இயல்பாக நடிக்கின்றனர் என்றும், இந்த நெட்டிசன், 7 பேர் விடுதலை குறித்த கேள்விக்கு, ரஜினி கொடுத்த எபிக் ரியாக்‌ஷனான, அப்படியா எனக்கு தெரியாதே என்ற மீமை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

  இதெல்லாம் சகஜம்

  இந்த நெட்டிசன் கொஞ்சம் ஒரு படி மேலே சென்று, ரொம்ப ஓவராக ட்ரோல் செய்துள்ளார், மருத்துவமனையில், கட்டுகளுடன் இருக்கும் நடிகர் அஜித், எங்க வீர வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் என்று கூறுவது போல, செந்தில் கட்டுப் போட்டு இருக்கும் போட்டோவை போட்டு அஜித் ரசிகர்களை ஓவராக வம்பிழுத்து வருகின்றனர்.

  டேக்குக்கு ஏத்த போட்டோ

  தளபதி விஜய் மற்றும் தல அஜித் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தின் புகைப்படத்தை போட்டு, #அய்யோ_அம்மா_பைக்_ரேஸ் என்ற ஹாஷ்டேக்குக்கு ஏற்ற சரியான புகைப்படம் இது தான் எனவும் கலாய்த்து வருகின்றனர். இதுபோன்ற ட்ரோல்களை நிச்சயம் தளபதி விஜய் ரசிக்க மாட்டார் என தெரிந்தும் இப்படி செய்து வருகின்றனர்.

  வைரலாகும் வீடியோ

  வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் தல அஜித் பைக் ஸ்டன்ட் செய்யும் போது, விபத்து எப்படி ஏற்பட்டது, என்றும், இதுதான் ரியல் வீடியோ என்றும் ஒரு போலி வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ஆனால், அந்த வீடியோவில் இருப்பது அஜித் இல்லை என்றும், இது வெளிநாட்டு சாகச கலைஞர் ஒருவருக்கு ஏற்பட்ட விபத்து வீடியோ என்றும் அஜித் ரசிகர்கள் ஆதாரங்களை காட்டி வருகின்றனர்.

  ஏகப்பட்ட ஆப்பரேஷன்

  பைக் ரேஸ், கார் ரேஸ் என நிஜ வாழ்க்கையில் நடிகர் அஜித், பல தடவை இது போன்ற விபத்துக்களை சந்தித்துள்ளார். ஆனால், நெருப்பில் விழுந்தாலும், மீண்டும் எழுந்து பறக்கும் பீனிக்ஸ் பறவையாய் கம்பேக் கொடுத்து, தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். ஏகப்பட்ட ஆப்பரேஷன் என்ற லோக்கல் கானா பாடலை கொண்டு அடுத்த டேக் #ஏகப்பட்ட_ஆப்பரேசன் எனவும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

  குணமாகி வந்தா போதும்

  சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கத்தில், உருவாகி வரும் வலிமை படத்தில், அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். வலிமை படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இப்படியொரு செய்தி வெளியானதும், அப்டேட் வேண்டாம், அவர் குணமாகி வந்தால் போதும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

  ஹலோ விஜய்சேதுபதி சாரா

  ஹலோ விஜய்சேதுபதி சார் இன்னைக்கு, #போய் வேற வேலை இருந்தா பாருங்கடா ஹாஷ்டேக் எங்க சார் போச்சி.. உங்க மேல எல்லாருக்கும் தனி மரியாதை இருக்கு கெடுத்துக்காதீங்க சார் என கேப்பில் விஜய்சேதுபதியையும் டேக் செய்து தல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  English summary
  Ajith gets accident in valimai shooting spot news goes viral in social media. Ajith fans create #GetWellSoonTHALA and wish him for a speedy recovery. While Vijay fans create a troll hashtag and trending it in twitter.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X