பெண்களுடன் கூத்தடிக்கும் நடிகர்.. விஜய்யை வம்புக்கு இழுக்கும் பயில்வான் ரங்கநாதன்!
சென்னை: சினிமா பிரபலங்கள் குறித்து வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருக்கும் பயில்வான் ரங்கநாதன், நடிகர் விஜய் குறித்தும், கோட் படம் குறித்தும் பேசி இருக்கிறார். இதனால், டென்ஷனான விஜய் ரசிகர்கள் இதக்கூட கிசுகிசு மாதிரித்தான் சொல்லுவீங்களா என கேள்வி கேட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். இந்த முதல் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வரும் 5ந் தேதி வெளியாக உள்ளது. இதில், விஜய் இரண்டு வேடத்தில் நடித்துள்ளார். மேலும், சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், பிரம்ஜி, வைபம் என பலர் நடித்துள்ளனர்.

விஜய்யின் கோட்: இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து இருக்கும் நிலையில், இப்படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் இணையதளத்தில் டிரெண்டாகி உள்ளது. பாடல் மட்டுமில்லாமல், இந்த படத்திலிருந்து வெளியான டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
பயில்வான் ரங்கநாதன்: இந்த டிரைலர் வெளியாகி பல நாட்கள் ஆகி உள்ள நிலையில், பயில்வான் ரங்கநாதன் டிரைலர் குறித்து பேசி இருக்கிறார். டிரைலர் நல்லாத்தான் இருக்கு இருந்தாலும், அந்த படத்தில் விஜய் பெயர் காந்தி. மகாத்மா காந்தி, அசைவம் சாப்பிடமாட்டார், குடிக்கு எதிரானவர். ஆனால், இந்த படத்தில் காந்தி என்று பெயர் வைத்து இருக்கும் விஜய் குடிக்கிறார், பெண்களுடன் கூத்து அடிக்கிறார். மேலும், சினேகா, என் வீட்டுக்காரருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்குமோ என்கிற சந்தேகம் இருப்பதாக பேசி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் நடிகர் விஜய் பெண்களுடன் கூத்தடிக்கும் காட்சி உள்ளது. இது இளவட்டங்களை கொண்டாட வைத்து இருக்கு என்று விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் வகையில் பேசி இருந்தார்.
கடுப்பான பேன்ஸ்: பயில்வான் ரங்கநாதனின் இந்த விமர்சனத்தை கேட்டு கடுப்பான விஜய்யின் ரசிகர்கள், அந்த டிரைலரில் எவ்வளவோ நல்லவிஷயம் இருக்கு அது எல்லாம் உங்களுக்கு கண்ணுக்கு தெரியவில்லையா என்றும், விமர்சனத்தையும் கிசு கிசு மாதிரியே சொல்லுங்க என்றும் கருத்துக்களை பகிர்ந்து அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











