”பிட்டு படம் டி” பாட்டுப் போட்டவரு படத்துல அஜித்தா?.. பஹீரா சீனை போட்டு கலாய்க்கும் விஜய் ஃபேன்ஸ்!

சென்னை: மீண்டும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டை சோஷியல் மீடியாவில் சூடு பிடித்துள்ளது. விஜய் வெளியிட்ட கோட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விட சுரேஷ் சந்திரா வெளியிட்ட அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டைட்டில் போஸ்டர் அதிக மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது என அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

குட் பேட் அக்லி வெளிநாட்டு படத்தின் காப்பி என்றும் மலையாளத்திலேயே மேக்னா ராஜ் நடித்து 2013ல் அப்படியொரு படம் வந்திருக்கிறது என அந்த போஸ்டர்களை எல்லாம் எடுத்துப் போட்டு விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Vijay fans trolled Good Bad Ugly Director Aadhik Ravichandran with Baheera scenes

மேலும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் என்பதால் அவர் இயக்கிய திரிஷா இல்லைன்னா நயன்தாரா முதல் பஹீரா படக் காட்சிகள் வரை பல சீன்களை வைத்து அஜித் ரசிகர்களுடன் ஆன்லைன் வாரை விஜய் ரசிகர்கள் ஆரம்பித்துள்ளனர்.

வதந்தி இல்லை உண்மை: ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார் என கடந்த சில மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியாகி விட்டன. ஆனால், அதெல்லாம் வெறும் வதந்தி மட்டும் தான் என அஜித் ரசிகர்களே விஷ்ணுவர்தன் இயக்கினால் நல்லா இருக்கும் என விரும்பி வந்தனர். ஆனால், கடைசியில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடிக்கவுள்ள ஏகே 63 படத்தை அதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விக்னேஷ் சிவனுக்கு கிடைக்காத வாய்ப்பு: போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கு கிடைக்காத வாய்ப்பு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கிடைத்து விட்டதே எப்படி? என்றும் ஏகப்பட்ட கேள்விகள் சினிமா வட்டாரத்திலேயே எழுந்துள்ளது. ஆதிக் சொன்ன கதை அஜித்துக்கு பிடித்துப் போன நிலையில், நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

Vijay fans trolled Good Bad Ugly Director Aadhik Ravichandran with Baheera scenes

பஹீரா காவியத்தை பார்த்துட்டா: ஆதிக் ரவிச்சந்திரன் விஷால், எஸ்.ஜே. சூர்யாவை வைத்து இயக்கிய மார்க் ஆண்டனி படம் தான் அவருக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. அந்த படத்திலேயே விடாமுயற்சி டைட்டிலை எல்லாம் உள்ளே அழகாக வைத்து அஜித்தை இம்ப்ரெஸ் செய்திருப்பார். ஆனால், தனது பேட்டிகளில் மார்க் ஆண்டனி படத்துக்கு முன்பே அஜித் என்னுடைய இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் என சொல்லி வரும் நிலையில், பஹீரா காவியத்தை பார்த்துட்டா அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் படத்துக்கு ஓகே சொன்னார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிட்டு படம் டி பாட்டு: திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தில் கயல் ஆனந்தியை பார்த்து ஜி.வி. பிரகாஷ் பிட்டு படம் டி என பாட்டுப் பாடி ஆடுவாரே அந்த படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் தான் அடுத்து அஜித் நடிக்கப் போகிறாரா? என கலாய்த்து வருகின்றனர். மார்க் ஆண்டனி படத்தில் அனகொண்டா காமெடி போல இந்த படத்தில் அஜித் ரவிச்சந்திரன் என்ன காமெடி வைக்கப் போறாரோ என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.

எத்தனை பசங்கள ஏமாத்திருப்ப?: நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த அஜித் பஹீரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் எப்படி நடிக்கலாம் என்றும் படத்தின் டைட்டில் “குட் பேட் அக்லி” என இருப்பதால் அக்லியான காட்சிகள் பஹீரா படத்தில் இடம்பெற்றதை போல் இருக்குமா? என அந்த காட்சிகளையும் ஷேர் செய்து விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், அஜித் படத்தை ஃபேன் பாய் சம்பவமாக ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனியை விட மாஸாக எடுப்பார் என அஜித் ரசிகர்கள் உறுதியுடன் பதிலடி கொடுத்து வருகின்றனர். அடுத்த பொங்கல் வரை இந்த பஞ்சாயத்து ஓயாது என்று தான் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X