ஹீரோயினா ராஷ்மிகா.. அப்படியே வில்லனா ஜகபதி பாபுவை கமிட் பண்ணிட்டிங்கனா.. தளபதி 66 மரண மீம்ஸ்!

சென்னை: தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடி ராஷ்மிகா மந்தனா தான் என்பது உறுதியாகி உள்ள நிலையில், மீண்டும் விஜய் ரசிகர்கள் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவுக்கு என்னடா இப்படியொரு சோதனை இங்கே என பலரும் குழம்பிப் போகும் அளவுக்கு ரசிகர்கள் ராஷ்மிகாவை ஓட்டி வருகின்றனர்.

கார்த்தியின் சுல்தான் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த படங்களை பார்த்த ரசிகர்கள், அவர் ரொம்ப ஓவர் ஆக்டிங் செய்து வருகிறார் என ட்ரோல் செய்திருந்தனர்.

விதி வலியது

விதி வலியது

விஜய் ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவை எவ்வளவு தான் வேண்டாம் என சொல்லி வந்தாலும், விதி வலியதே என்பது போல அவர் தான் விஜய்யின் தளபதி 66 படத்துக்கு ஹீரோயின் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை பெரும்பாலான விஜய் ரசிகர்களும் வேறு வழியின்றி ஏற்று வருகின்றனர்.

கிச்சானாலே

கிச்சானாலே

ராஷ்மிகா மந்தனா தான் விஜய்க்கு ஜோடி என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், விஜய் ரசிகர்கள் மீண்டும் விரக்தியின் நிலைக்கு வந்து மீம்களை போட்டு தங்களின் மனக் குமுறல்களை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், கிச்சானாலே இளிச்சவாயன் தானே என விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ஓகேவா

ஓகேவா

விஜய் ரசிகர்களிடம் ஓகேவான்னு தளபதி 66 பட இயக்குநர் வம்சி கேட்பது போன்ற பங்கமான மீம் சமூக வலைதளங்களில் மீண்டும் டிரெண்டாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு ஓகே என்கிற மன நிலைக்கு வந்தாலும், இதை வைத்து அஜித் ரசிகர்கள் இன்னமும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் ரியாக்‌ஷன்

விஜய் ரசிகர்கள் ரியாக்‌ஷன்

ராஷ்மிகா மந்தனா தளபதி 66 படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் சிலர் சந்தோஷமாக ஜொள்ளு விட்டு வருகின்றனர் என்றும், சிலர் கோபத்தில் கடுப்பாகி முறைத்து பார்த்து வருவதாகவும் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படத்தை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

எந்த ஆக்‌ஷனும்

எந்த ஆக்‌ஷனும்

ஓகேன்னு போட்டு.. எந்த ஆக்‌ஷனும் எடுக்க முடியாத நிலையில இருக்கேன் என போக்கிரி படத்தின் போட்டோ மீமை போட்டு மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். இதுவரை ராஷ்மிகா மந்தனா இருக்க மாட்டார் என ஏகப்பட்ட நடிகைகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வந்த நிலையில், ஆரம்பத்தில் எதிர்பார்த்த அதே பெயர் தான் தற்போது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

ஜகபதி பாபு வில்லன்

ஜகபதி பாபு வில்லன்

ஹீரோயினா ராஷ்மிகா மந்தனாவையும், வில்லனா ஜகபதி பாபுவையும் கமிட் பண்ணிட்டீங்கனா அப்புறம் குலுக்கல் தான் என வேற லெவலில் வச்சு செய்து வருகின்றனர். வம்சி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான மகரிஷி படத்தில் வில்லனாக ஜகபதி பாபு தான் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X