தூய சக்தி பிளாக்ல டிக்கெட் விக்காது.. ’ஜன நாயகன்’ விஜய்யை அட்டாக் செய்த சீமான்.. ரசிகர்கள் செம கலாய்!
சென்னை: "பழனிபாபா சொன்னாரு, நடிகன் பின்னாடி போகாதீங்க, வீர மக்களை படிங்கடா, வீரர்கள் பின்னாடி போங்கடான்னு" பேசிய சீமான் நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் நல்லவேளை இந்த மாதம் ரிலீஸ் ஆகவில்லை என விஜய் ரசிகர்கள் சீமானின் பேச்சை கலாய்த்து வருகின்றனர்.
அதற்கு காரணம், "விஜய் ஒரு தூய சக்தி பிளாக்ல ஜன நாயகன் பட டிக்கெட்டை விக்காது" என சீமான் அரசியல் பரப்புரையின் போது பேசியது தான் என்கின்றனர்.

வரும் பொங்கலுக்கு ஜன நாயகன் மற்றும் பராசக்தி படங்கள் போட்டியாக வெளியாகவுள்ள நிலையில், விஜய் தீயசக்தி, தூயசக்தி என்கிற அட்டாக் மோடை ஆரம்பித்தார் என்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஜன நாயகன் ஆடியோ லான்ச்: விஜய்யின் கடைசி படம் என சொல்லப்படும் ஜன நாயகன் ஆடியோ லான்ச் நாளை மறுநாள் வரும் டிசம்பர் 27ம் தேதி சனிக்கிழமை மலேசியாவில் உள்ள ஓபன் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. சுமார் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் ரசிகர்கள் வரை ஆடியோ லான்ச்சில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிநாட்டில் இருந்தே பல ஆயிரம் ரசிகர்கள் மலேசியாவுக்குச் சென்று விஜய்யின் ஜன நாயகன் ஆடியோ லான்ச்சை பார்க்க ஆவலுடன் இப்போதே கிளம்பிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித் குமார், தனுஷ், சிம்பு என சில பிரபலங்கள் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாகவும் விஜய்யின் ஆஸ்த்தான இயக்குநர்களான அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்ட பலரும் இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூயசக்தி பிளாக்ல விக்காது: நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது, "ஜன நாயகன் படத்துக்கு பிளாக்ல டிக்கெட் கிடைக்காது. உள்ளபடியே அங்கீகரிக்கப்பட்ட விலையில் தான் டிக்கெட் விற்பனையாகும். ஏன்னா? அது தூயசக்தி பிளாக்ல டிக்கெட் விக்காது. இது ஒரு கொடுமை.. கொடுமை" என பேசி பங்கமாக கலாய்த்துள்ளார்.
நல்லவேளை எல்ஐகே ரிலீஸ் ஆகல: "எங்க அண்ணன் பழனிபாபா சொல்வாரு.. வீரர்களை படிங்கடா, வீரர்கள் பின்னாடி போங்கடா.. நடிகன் பின்னாடி போகாதீங்கடா என சொல்வாரு" என மீண்டும் விஜய்யை அட்டாக் செய்யும் விதமாக சீமான் பேசிய வீடியோ வைரலாகி வரும் நிலையில், அதற்கு கீழ் கமெண்ட் பக்கத்தில் விஜய் ரசிகர்கள், நல்லவேளை இந்த மாசம் சீமான் நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் வெளியாகவில்லை. இவர் அரசியலுக்கு வந்த பின்னர் நடிகனாக ஏன் படத்தில் நடித்தார். இவர் பின்னாடியே யாரும் வரவேண்டாம் என்பதை தான் சொல்றாரு என கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











