Sudha Kongara Trolls: பராசக்தி பஞ்சர்.. ஓட்டேரி நரி பேர்ல எழுதுங்க.. விஜய் ரசிகர்கள் வலையில் சிக்கிய கொங்கரா

சென்னை: பராசக்தி படமும் ஜன நாயகன் படமும் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஜன நாயகன் படத்திற்கு சென்சார் கிடைக்காததால் படம் ரிலீஸ் ஆகவில்லை. இப்படி இருக்கையில் , பராசக்தி படத்திற்கும் ரிலீஸ்க்கு ஒரு நாள் முன்பு சென்சார் கிடைத்தது. பராசக்தி படம் வெளியாகி ஓடிக் கொண்டு உள்ள நிலையில், படத்தை விஜய் ரசிகர்கள் ஓவராக ட்ரோல் செய்து வருகிறார்கள். இது தொடர்பான சுதா கொங்கரா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், படம் வெளியாக நடிகரின் ரசிகரகள் செய்யும் ரவுடியிசம் மற்றும் குண்டர்தனத்தையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது என்று தெரிவித்தார். சுதா கொங்கராவின் இந்த பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சுதா கொங்கராவை கடுமையாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Vijay Fans Deadly Trolls To Director Sudha Kongara With Parasakthi Disaster Hashtags

அதாவது ஒரு பதிவில், " லோகேஷ் மாதிரி சம்பளம் கேட்டல அப்போ அவரை மாதிரி அடியும் வாங்கு" என்று ஒரு பதிவில் வடிவேலு அடிவாங்கும் டெம்ப்ளேட்டை போட்டு லேடி டைரக்டர் என்று மென்ஷன் செய்துள்ளார்கள். அதேபோல் மற்றொரு வீடியோ மீமில், முன்னால் சென்று கொண்டு இருக்கும் டூ வீலர் அதுவாக ஸ்கிட் ஆகி கீழே விழுகிறது. உடனே அந்த டூ வீலரில் பயணித்த பென் ஒருவர், பின்னால் வந்த வண்டி மோதித்தான் தங்களது டூ வீலர் கீழே விழுந்தது என்று வாதிடும் வீடியோவைப் பகிர்ந்து அந்த வாதிடும் பெண் தான் லேடி டைரக்டர் என்று பதிவிட்டுள்ளார்கள்.

ஏமாற்றுப் பேர்வழி: அதேபோல் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஷாலின் மரியா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், " சுதா கொங்கரா நீங்கள் ஒரு ஏமாற்றுப் பேர்வழி. நீங்கள் மோசமான படத்தை எடுத்துள்ளீர்கள் என்று ஒப்புக் கொண்டு இதில் இருந்து நகருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு விஜய் ரசிகர் ஒருவர் டைரக்ட் அடி என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு பதிவில், பராசக்தி ஓடல விஜய் பேன்ஸ்தான் காரணம்,கூலி ஓடல விஜய் பேன்ஸ்தான் காரணம்,வேட்டையன் ஓடல விஜய் பேன்ஸ்தான் காரணம் என்று எழுதி முதல்வன் படத்தில் அர்ஜுன் சொல்லும் டயலாக்கான எவ்ரிபடி என்ற டெம்ப்ளேட்டை வைத்துள்ளார்கள்.

தரக் குறைவாக: அதேபோல் மற்றொரு விஜய் ரசிகரோ, " உண்மை கதையை படமாக்க துப்பில்லை, படத்தை எதிர்த்து தடை செய்யணும் னு அறிக்கை விட்ட காங்கிரஸ் கட்சிக்கு பதில் அளிக்க வக்கு இல்ல, இப்போ படம் ஓடலைனு விஜய் ரசிகர்களை தரை குறைவாக பேசுற. Mind your words sudha" என்று பதிவிட்டுள்ளார். தொடர்ந்து விஜய் ரசிகர்கள் சுதா கொங்கராவையும் பராசக்தி படத்தையும் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக டிரைலர் 50 மில்லியன் வியூவ்ஸ் போச்சு என்று சொன்னீர்களே, அமரன் படத்தில் பாதி கூடவா பராசக்தி கலெக்‌ஷன் செய்யவில்லை என்று ஒரு மீம் பகிர்ந்துள்ளார்கள். மேலும் பராசக்தி டிசாஸ்டர் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X