இதுக்குத்தான் அவ்ளோ அலப்பறையா?.. வெங்கட் பிரபு வெளியிட்ட அப்டேட்.. வெளுத்து வாங்கும் விஜய் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் உங்கள் முன்னாள் காதலியை இப்போ சந்தித்தால் என்ன பேசுவீங்க என ஒரு ட்வீட் போட உடனடியாக கெளதம் மேனன், வெங்கட் பிரபு எல்லாம் ட்வீட் போட ஆரம்பிச்சிட்டாங்க, இயக்குநர் சேரனும் தனது ஆட்டோகிராஃப் கதையெல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார்.
என்னடா இது ஓல்டு ஸ்கூல் பீஸெல்லாம் ஒண்ணா சேருதே ஏதோ புது படத்திற்கான புரமோஷனா என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அழகி படத்தை ரீ ரிலீஸ் செய்யப் போறதுக்குத்தான் இத்தனை பில்டப்.

அதன் அறிவிப்பை "கோட்" அப்டேட் சூன் என ட்வீட் போட்டு ஆள் எஸ்கேப்பான வெங்கட் பிரபு தற்போது வெளியிட்டுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்து கமெண்ட் பக்கத்தில் கதற விட்டு வருகின்றனர்.
அஜித் பட அப்டேட் வந்தவுடனே: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த உள்ள 63-வது படத்தின் டைட்டில் 'குட் பேட் அக்லி' என அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக, இயக்குநர் வெங்கட் பிரபு, நாங்களும் சீக்கிரமா விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் அப்டேட்டை விடப் போகிறோம் என ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். ஆனால் அந்த அப்டேட் எப்போது வரும் என்று இதுவரை தெரிவிக்காத நிலையில் விஜய் ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அழகி ரீ ரிலீஸ்: தமிழ் சினிமாவில் புதிதாக வெளியாகும் படங்கள் எல்லாம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் பழைய சூப்பர் ஹிட் படங்களை மீண்டும் ரீ ரிலீஸ் செய்து கல்லா கட்டத் தொடங்கியுள்ளனர். புதிய படங்கள் மூன்று நாட்கள் கூட ஓட முடியாத சூழ்நிலையில், ரீ ரிலீஸ் படங்கள் மூன்று நாட்கள் நல்ல வசூலை ஈட்டி தருவதாக கூறுகின்றனர். அந்த வரிசையில் வரும் மார்ச் 29-ம் தேதி தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன் நடித்து வெளியான அழகி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. அதன் அறிவிப்பை தற்போது வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கோட் அப்டேட் எங்க: 'குட் பேட் அக்லி' படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பல மில்லியன் வியூஸ் அள்ளியுள்ள நிலையில், 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் எப்போது வரும் என தளபதி ரசிகர்கள் ரசிகர்கள் டார்ச்சர் பண்ண ஆரம்பித்து விட்டனர்.

மத்த பட அப்டேட்: "என்ன தலைவா போட் படத்தின் அப்டேட்டை தவிர மத்த படங்களின் அப்டேட்டை எல்லாம் விடுறீங்க.. நாங்க பாவம் இல்லையா என்றும், " ஓ இதுதான் வந்து வெரி சூன் அப்டேட்டா", ஒரு அளவுக்குத்தான் அமைதியா இருப்போம் என வெங்கட் பிரபு ஒரு ரவுண்டு கட்டி உள்ளனர்.

அஜித் ரசிகர்கள் கலாய்: கோட் படத்தின் அப்டேட் எல்லாம் இப்போதைக்கு வராது. அது சும்மா, அஜித் பட அப்டேட் வந்ததும் அதை மறக்கடிக்க முயற்சி பண்றதுக்கு ஒரு ட்வீட் அவ்வளவு தான் என அஜித் ரசிகர்களும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











